உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆறு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அதை இந்திய அணியின் ரசிகர்கள் பலரும் அதை விமர்சித்து இவர் ஹிட் மேன் கிடையாது டக் மேன் என சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வந்தனர்.

அதன் பின் நேற்று இந்திய அணி ஆப்கானிஸ்தான அணியை எதிர்கண்டது அதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யது பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 272 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதறடித்தார்.
மேலும் 84 பந்துகளில் 131 ரன்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது மட்டுமல்லாமல் அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் ரோஹித் சர்மா. அதுமட்டுமல்லாமல் ஐசிசி போட்டிகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா.

சுனில் கவாஸ்கர் கூறியது :
இப்படிப்பட்ட நிலையில் தான் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில் “நிறைய சதங்களை அணிக்காக தவறவிட்டதால் அவருக்கு இந்த சதம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரோஹித் சமர் ஒரு ரிஸ்க் எடுப்பவர். அதனால் சில சமயங்களில், என்ன நடக்கும் என்றால் 60கள், 70 ரன்களில் இருக்கும் போது அடித்து விளையாட நினைப்பார்.
அவர் எத்தனை முறை அரை சதங்களுடன் அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொண்டு வந்திருக்கிறார் பாருங்கள். ஆனால் ரோஹித் சர்மா அடித்து விளையாடவே விரும்புகிறார். அணிக்கு நன்மை செய்வதால் அதே வழியில் தொடர வேண்டும். உதாரணமாக இன்று நீங்கள் ஒரு ஓவருக்கு 8 ரன்கள் ரன் ரேட் பெறுகிறீர்கள் என்றால் அதனை தொடர வேண்டும். பொதுவாக ஸ்டிரைக் ரேட் உங்கள் ஒரு முக்கிய தொடரில் அணியின் நிகர ரன் ரேட்டிற்கு உதவுகிறது.
என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? மற்றொரு 5-6 போட்டிகளுக்குப் பிறகு. நீங்கள் தகுதிபெற உங்களுக்கு அந்த புள்ளிகள் தேவைப்படலாம். எனவே தெளிவாக அவர் சில சதங்களை தவறவிட்டிருக்கலாம், ஆனால் அவர் நம்மை மகிழ்ந்தார். மேலும் ரோஹித் இன்று ஒரு சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். அவர் அடித்த சில சிக்ஸர்கள் நம்பமுடியாதவை என்று கூறினார் கவாஸ்கர்.




