தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடர்ந்து இந்திய அணி தொடக்கம் முதலே வலுவான அணியாக இருந்து வருகிறது. ஆனால் அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருக்கும் போதுதான் இந்திய அணியின் துணை கேப்டனும்,ஆல்ரவுண்டருமாகிய ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இது சிறிய காயமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மருத்துவர்கள் ஹர்திக் பாண்டியாவை சில நாட்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளனர்.

இதனால் இன்று தர்மசாலா மைதானத்தில் நடக்க இருக்கும் இந்தியா vs நியூசிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. மறுபுறம் நியூசிலாந்து அணி இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் ஆடிய 4 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்கும் போது அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ், அல்லது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் களமிறங்கினால் அது பேட்டிங் பலத்தை கொஞ்சம் குறைக்கும் எனவே சூரியகுமார் அல்லது இஷான் கிஷான் களமிறக்கலாம் என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் குறி வரும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் இது குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் “நான் மட்டும் இந்திய அணியில் இருந்திருந்தால் இந்த மாதிரியான சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் அல்லது இசான் கிசான் ஆகியோரை இந்த போட்டியில் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக தேர்வு செய்வேன். ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த நியூசிலாந்து பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக இந்தியாவின் தொடக்க வீரர்களான 2 மற்றும் மூன்றாம் இடத்தில் களமிறக்கும் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி வருவது பிரச்சினையாக இருந்து வருகிறது.
எனவே அதை சமாளிக்க இந்தியாவின் பேட்டிங் ஆழத்தை அதிகரித்து தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை பாண்டியாவுக்கு பதலாக அஸ்வின் வந்தால் அது உங்களுடைய பேட்டிங்கை பலவீனப்படுத்தும். எனவே இடது கை பேட்ஸ்மேன் இசான் கிசான் அல்லது சூரியகுமார் 6வது இடத்தில் விளையாட வேண்டும். அதே சமயம் வேகத்துக்கு சாதகமாக மைதானம் இருக்கும் பட்சத்தில் தாக்கூருக்கு பதிலாக ஷமியை கொண்டு வரலாம் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

இந்நிலையில் யாருமே மறக்க முடியாத கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் அரைஇறுதி போட்டியின் போது நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா எப்போதுமே ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது. எனவே அது போன்ற நிலைமையை சமாளிக்க இந்தியாவின் பேட்டிங்கில் ஆழத்தை ஏற்படுத்த வேண்டு என்றும், பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் அல்லது இசான் கிசான் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.



