கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது. அதாவது ஆசிய கோப்பை போட்டியானது வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவே இந்தியா vs பாஸ்கிதான் போட்டியானது நடக்க இருப்பதால ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்ட்டுள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் மீண்டும் நேரடியாகவே தேர்வாகியுள்ளதும் சஞ்சு சாம்சன் வெறும் பேக்-அப் வீரராக கண்துடைப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் காலம் காலமாக தொடர் வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் 390 ரன்களை 55.71 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். ஆனால் சூரியகுமார்ஒருநாள் கிரிக்கெட்டில் 24 போட்டிகளில் 544 ரன்களை 24.32 என்ற மோசமான சராசரிலேயே எடுத்துள்ளார். அதே போல சஹாலை விட குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் இவர்களின் தேர்வு குறித்து பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

சமீபத்திய தொடர்பில் சஞ்சு சாம்சன் சற்று அதிக ரன்கள் அடித்திருந்தால் நிச்சயமாக இந்த அணியில் இன்றியமையாதவராக இருந்திருப்பார். சஹால் தேர்விலும் அதே நிலைமை தான். இருப்பினும் சில நேரங்களில் தேர்வுக்குழுவினர் அணியின் சமநிலைமையை பார்க்கிறார்கள். அது போக சில தருணங்களில் அந்தக் குறிப்பிட்ட வீரர்கள் ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக அணிக்கு உதவ முடியுமா என்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்”

அதன் அடிப்படையில் பார்க்கும் போது லோயர் ஆர்டரில் சஹாலை விட குல்தீப் யாதவ் சற்று சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதே போலவே சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்தாலும் ஆல் ரவுண்டர்களை அணி நிர்வாகம் பார்க்கின்றனர். இருப்பினும் தற்போது 29 வயது மட்டுமே நிரம்பியுள்ள சஞ்சு சாம்சனுக்கு இது உலகக் கோப்பையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் இந்திய அணியில் நிலையான இடம் பிடிப்பதற்கு இன்னும் தேவையான காலங்கள் இருக்கின்றன. எனவே தற்சமயத்தில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி சிறப்பாக இருக்கிறதாகவே நான் கருதுகிறேன்” என்று கூறினார்.




