தற்போது நடந்து வரும் உலக கோப்பை 2023 தொடரில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அவர்கள் விளையாடிய 7 போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்த உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த வெற்றிகளின் மூலம் அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா உறுதி செய்துள்ளது.

இந்திய அணியிடம் தற்போது பேட்டிங்கிலும் பந்துவீச்சில் வீரர்கள் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். இடையே ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்ப்பட்டாலும் அதிலிருந்து மீண்ட இந்தியா தற்போது அவருக்கு மாற்று வீரரையும் தேர்வு செய்து எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் தயாராக இந்திய அணி இருந்து வருகிறது. சமி, பும்ரா, சிராஜ், குல்தீப் என அனைவரும் சிறப்பாக பந்துவீச. விராட், ரோஹித் சர்மா என அனைவரும் அதிரடியாக விளையாடி பேட்டிங்கிலும் வலு சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி போலவே இந்த உலக கோப்பை போட்டியில் பலமான அணியாக இருந்து வருவது தென்னப்பிரிக்க அணி. தென்னாபிரிக்கா விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியடைந்த புள்ளி பட்டியலில் நம்பர் 2 இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் பலமான அணியாக திகழும் இந்தியாவிற்கும் தென்னப்பிரிக்க அணிக்கும் எதிரான அனல் பார்க்கும் போட்டி இன்று நடக்கும் நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

அவர் பேசுகையில் “சில வாரங்களுக்கு முன்பு இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டபோது டேபிள்-டாப்பர்கள் இருவரும் கடைசியாக சந்தித்து அவர்களை முழுமையாக வீழ்த்தியபோது இருந்த சவாலுக்கும், தற்போது இந்தியாவிற்கு இருக்கும் இந்த சவாலானது வித்தியாசமானதாக இருக்கும். இந்தியாவைப் போலவே தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்ட் அணியைப் பெற்றுள்ளதால் இது கடினமாக இருக்கும் என்றார் சுனில் கவாஸ்கர்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “அபாரமான ஃபார்மில் இருக்கும் அவர்கள் ஒருவேளை இந்திய பேட்டர்களை விட சிறந்த ஃபார்மில் இருக்கும் பேட்டர்களை அவர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் ஒரு அற்புதமான புதிய பந்து தாக்குதலையும் பெற்றுள்ளனர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ், பொதுவாக குறைத்து மதிப்பிடப்படுவார், அவர் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்தார் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.



