உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இதனால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலியை முறியடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்கு விராட் கோலியும் தன்னால் முடியும் என்று கடந்த பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் 47 வது சதம் அடித்தார். அதற்கு பிறகு பங்ளாதேஷ் அணிக்கு எதிராக 1 சதம் அடித்ததான் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை அடித்தார் விராட் கோலி. இதனால் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னமும் 1 சாதங்களே மீதம் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் விராட் கோலி 50 வது சதத்தை ஈடன் கார்ட்டன் மைதானத்தில் அடிப்பார் என கணித்துளார் கோலி. அவர் பேசுகையில் “தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் விராட் கோலி தனது 50வது ODI சதத்தை அடிப்பார் என்று சுனில் கவாஸ்கர் கண்டித்திருக்கிறார். மேலும் அந்த தருணம் நடக்க விராட் கோலியின் பிறந்தநாளை விட சிறந்த சந்தர்ப்பம் என்ன? கொல்கத்தாவில் நடக்கும் போட்டிக்கு முன்பாக 49வது சதத்தை அடிக்க அவருக்கு இரண்டு ஆட்டங்கள் உள்ளன. ஈடன் கார்டன்ஸ் ரன் குவிப்பதற்கான சிறந்த மைதானங்களில் ஒன்றாகும் என்றார் கவாஸ்கர்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “கொல்கத்தா மைதானத்தில் உள்ள ரசிகர்களின் கூட்டம் உங்களுக்கு ஒரு நின்று வாழ்த்து கூறும் போது அது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும். ஏனெனில் கொல்கத்தா கூட்டம் உங்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்கிறது, மேலும் உங்களை உற்சாகப்படுத்துகிறது, காற்று விசில் மற்றும் கைதட்டல்களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு பேட்டருக்கும் இது ஒரு மறக்க முடியாத தருணம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 95 ரன்களில் அவுட் ஆனார். இருந்த போதிலும் அடுத்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாட இருக்கும் நிலையில் கண்டிப்பாக 1 சதம் அடிக்க வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



