நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்டது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியானது அப்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியாக உள்ளே வந்தது, மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணியானது சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியிடம் தோற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் கோபமடைந்த சிலர் இந்தியா வேண்டுமென்றே இலங்கை அணியிடம் இந்தியா தோற்க வேண்டும் என்று விளையாடியதாகவும் அது பாகிஸ்தான் அணியை வெளியே அனுப்ப போட்ட திட்டம் என்றும் சோசியல் மீடியாக்களில் கூறிவந்தனர். அப்படிப்பட்ட நிலையில் தான் அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
அவர் கூறுகையில் “இலங்கைக்கு எதிராக 213 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு இடம் கிடைக்காமல் போகவே, வேண்டுமென்றே இந்திய அணியானது ஆட்டத்தை இழந்தது என்று அலறிக் கதறிக் கொண்டிருந்த மேற்கு எல்லையைத் தாண்டிய அனைவரின் முகத்திலும் இந்தியா இறுக்கமான அறை ஒன்றை கொடுத்துள்ளது. இந்திய அணியானது இலங்கையிடம் தோற்று, பின்னர் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தி, இந்தியா – பங்களாதேஷ் ஆட்டம் மழையால் நின்றது என்றரல் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்காது.
எப்படி அவர்கள் இப்படி நினைக்கின்றனர். பாகிஸ்தான் இலங்கையிடம் தோல்வியடைந்து, போட்டியிலிருந்து வெளியேறியபோது, தோல்விக்கு இந்திய அணியை குற்றம் சாட்டி மேலும் சில சதி கோட்பாடுகளை கொண்டு இந்தியா விளையாடுவதாக கூறினார்கள். இதற்கு முன்னர் 2019 உலகக் கோப்பையின் இங்கிலாந்திடம் இந்திய அணியானது தோற்றபோதும் இதே போன்ற சதி கோட்பாடு முன்வைக்கப்பட்டது. எம்எஸ் தோனி, வேண்டுமென்றே மெதுவாக பேட்டிங் செய்தார் என்று குற்றம் சாட்டினார்கள்.
தாய்க்கு விளையாட்டு குறித்து நன்றாகவே தெரியும். அவர் விளையாட்டை ஆழமாக எடுத்துச் சென்று பேங்-பேங் செய்ய விரும்புகிறார் என்று உறுதியளிக்கிறார்கள். இங்கிலாந்து சிறப்பாகப் பந்துவீசியதால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை, ஆனால் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியானது இடம் பெறாமல் இருக்க வேண்டுமென்றே இதைச் செய்ததாக முட்டாள்கள் நினைத்தார்கள்.
உலகக் கோப்பை அணிகள் என்று வரும்போது, அவர்கள் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு எதையும் செய்வார்கள் என்பதை நாம் வெளிப்படையாகப் புரிந்துகொள்வோம். அப்படியென்றால் உங்கள் அணியின் முன்னேற்றத்திற்கு வேறு அணியை ஏன் சார்ந்திருக்க வேண்டும்? நீங்கள் ஏன் எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி ஏன் வெற்றி பெறக்கூடாது? நீங்கள் ஏன் இந்திய அணியை சார்ந்திருக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.



