அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் போட்டியானது உலக கோப்பையை வெல்வது போல ஒரு போட்டியாக இருக்கும் என்றும் முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் பரம எதிரிகளுக்கான போட்டியை பற்றி சுனில் கவாஸ்கர் கூறுகையில், இது உலக கோப்பையின் போட்டியின் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்றும் கூறினார்.

சுனில் கவாஸ்கர் கூறியது:
அவர் கூறுகையில் நாங்கள் இந்த உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வெல்ல வேண்டும். ஆனால் இந்த உலக கோப்பையில் இது முக்கியமான போட்டி. இந்தப் போட்டியானது அதிக எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் போட்டி. நீங்கள் சமார்னீய மனிதர்களிடம் கேட்கும் போது அவர்கள் பாகிஸ்தானை வெற்றி பெற வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் எங்களுக்கு அது மட்டும் போதாது நாங்கள் உலகக் கோப்பை போட்டியிலும் வெல்ல வேண்டும்.

எங்களுக்கு அதில் எந்தவித கேள்வியும் கிடையாது என்றும் அவர் கூறியிருந்தார். 2016 ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக பாகிஸ்தான அணி தற்போது இந்தியா வந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பெரும்பான்மையான வீரர்கள் இந்தியாவில் விளையாடும் முதல் போட்டியில் முதல் உலகக் கோப்பை போட்டியில் இதுவே ஆகும். மேலும் அதே நிகழ்வில் பேசிய முன்னாள் இந்திய வீரர்களின் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தானின் பார்மில் இருப்பதாக நான் பார்க்கவில்லை.
ஹர்பஜன் கூறியது:
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவை வென்று பாகிஸ்தான் முன்னேறி செல்லும் என்பதை நான் பார்க்கவில்லை. அவர்கள் ஒரு நல்ல டி 20 அணி. ஆனால் ஆசிய கோப்பை மற்றும் பயிற்சி ஆட்டங்களில் நான் பார்த்ததில் அவர்கள் சாதாரண தரமற்ற வீரர்களாக தான் தெரிகிறார்கள். இந்திய அணி பாகிஸ்தான் எதிராக சாதனை மாறிவிட்டது என்று என்று ஹர்பஜன் கூறியிருந்தார். ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டி உலக அளவில் மிகவும் தீவிரமான போட்டிகளில் ஒன்றாகும்.

1992 ஆம் ஆண்டு உலக கோப்பையில் முதல் முதலாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின சிட்னியில் இந்திய 43 ரங்க வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது இருந்து உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இடைவிடாது வெற்றி தக்க வைத்துக் கொண்டு வந்தது 7 போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்று சரியான சாதனையை ஏற்படுத்தி வெற்றி பெறுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டி இரு நாடுகளின் ரசிகர்களுக்கும் மிகவும் ஆர்வமிக்க போட்டியாகும் என்றும் ஹர்பஜன் கூறியிருந்தார்.




