இந்திய அணியில் உள்ள பிரதான வீரர்கள் பலரும் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்ற காரணத்தினால் பல விதமான சோதனைகளை இந்திய அணியின் நிர்வாகம் செய்து வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்பாக பல சோதனைகள் செய்த்தனர் ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இருந்த போதிலும் எதிர்கால இந்திய அணியியை கருத்தில் கொண்டு இந்த வருடமும் சில சோதனைகளை செய்த்தனர்.

குறிப்பாக அணியில் திலக் வர்மா, இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர். மேலும் ஸ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் பும்ரா போன்றவர்கள் காயத்தில் இருந்து திரும்பிய நிலையில் உடனடியாக இந்திய அணிக்கு வந்தாலும் அவை சரியாகவே சென்றது என்று கூறலாம் குறிப்பாக இஷான் கிஷான் தற்போது நல்ல ஒரு பேக்கப் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு கிடைத்துளார்.
சொல்லப்போனால் கடந்த பல போட்டிகளில் இவரது பேட்டிங் திறமை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் எதிர்கால இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு கண்டிப்பாக வாய்ப்பு இருக்கும் என்பதை இது உறுதி செய்கிறது. இந்நிலையில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இஷான் கிஷனை கவனித்து கொள்ளுமாறு தோனி தன்னிடம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னதாக சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

அவர் இது குறித்து பேசுகையில் ” இஷான் கிஷன் ஒரு நல்ல குழு சூழலைப் பராமரிக்கும் வலுவான வீரர் என்பதினால் அவர் ஓபன் செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன். அந்த நாட்களிலும் அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவர் ராஞ்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் எம்.எஸ். தோனியிடம் பேசினார், அனைவருக்கும் தோனியுடன் இருப்பது பிடிக்கும்.
ஜார்கண்ட் அணிக்கு மஹேந்திர சிங் தோனியை போலவே இஷான் பங்களித்த விதம் காரணமாக, அவரது விக்கெட் கீப்பிங் முன்னேற்றத்தை கவனிக்குமாறு தோனி என்னிடம் கூறினார். எனவே அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடிய டுவைன் ஸ்மித் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் விளையாடவில்லை என்றால், இஷான் கிஷன் ஓப்பன் செய்ய வேண்டும் என்றார். நான் 3-வது இடத்தில் பேட்டிங் செய்வேன்.

மீதமுள்ள பேட்டிங் வரிசையை நீங்கள் தீர்மானிக்கலாம் என்று நான் ஃபின்ச்சிடம் சொன்னேன். ஒரு போட்டியில் எனக்கு நினைவிருக்கிறது. அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் 4-5 சிக்ஸர்களை அடித்தார், மேலும் அவர் தன்னை அந்த போட்டியில் வெளிப்படுத்திய விதம்தான் ஒரு அணிக்கு தேவை. ரிஷப் பன்ட்டைப் போலவே சிரித்துக்கொண்டே நல்ல அணி பிணைப்பைப் பேணுவதுதான் முக்கியம் என்று கூறினார் சுரேஷ் ரெய்னா.



