அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணியானது ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாட இருக்கிறது, மேலும் இந்த தொடரில் 50 ஓவர் போட்டிகளாக நடத்தப்படுவதினால் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஆசிய அணிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒருநாள் போட்டிகளில் சொதப்பிவரும் சூரிய குமார் யாதவிர்க்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போட்டியில் அவர் செயல்படுவது பொறுத்தே வரும் உலக கோப்பை போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுவதினால் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூரியகுமார் யாதவ். அப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் தன்னுடைய திட்டம் குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “இந்திய அணியில் எந்த ரோலாக இருந்தாலும் அணி எனக்குக் கொடுத்த பங்கை நிறைவேற்ற முயற்சி செய்வேன். இந்த ஃபார்மேட் நான் சிறப்பாக விளையாட காத்திருக்கிறேன். டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறேன். ஆனால் இவை இரண்டும் வெள்ளை பந்து வடிவங்கள். எனக்கு ஒருநாள் போட்டிகளில் இருக்கும் பிரச்னையை ஏன் நான் இங்கே உடைக்க முடியாது, மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

நான் தீவிரமான பயிற்சி செய்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளை என்பது மிகவும் சவாலானது.. நீங்கள் இதில் எல்லா வடிவங்களையும் கலந்து விளையாட வேண்டும். முதலில் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் சில ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்து பின்னர் டி20 ஐப் போன்ற சில பெரிய ஷாட்களுக்குச் செல்ல வேண்டும். இந்த விஷயம் குறித்து தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரிடம் பேசி வருகிறேன்.
ஆனால் நான் இப்போது சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட முயற்சிக்கிறேன், அதற்கேற்ப பயிற்சி செய்கிறேன். என்னுடை தடைகளை உடைக்கும் போட்டி இது என்று நம்புகிறேன். நான் எப்போதும் பேட்டிங் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். முதல் பந்திலேயே நான் அவுட் ஆனாலும் பரவாயில்லை. எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வரும்போது நான் ஏன் கிரீஸுக்கு ஓடுகிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் போட்டியில் உற்சாகமாக இருப்பது முக்கியம் என்று நான் உணர்கிறேன் என்றார் சூர்யகுமார் யாதவ்.

குறிப்பிடத்தக்க வகையில் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் போல ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளால் ஜொலிக்க வில்லை. 26 ஒருநாள் போட்டிகளில் விளையடையுள்ள சூரியகுமார் வெறும் 511 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே வரும் ஆசிய கோப்பை போட்டியானது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது.



