உலக கோப்பை 2023 தொடரானது தற்போது இறுதி கடத்தை எட்டியுள்ள. இந்த உலக கோப்பையில் விளையாடிய அனைத்து நாடுகளை சேர்ந்த அணிகளுமே தங்களினால் முடிந்த அனைத்தையும் செய்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடி வருகின்றனர். இருந்த போதிலும் தற்போது போட்டியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணி அரையிறுதி போட்டிக்கு செல்லவும் என்பது தெரிந்து விட்டது.

இருந்த போதிலும் பாகிஸ்தான் அணிக்கு இன்னமும் கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது, அதே போல நியூசிலாந்து அணி 4வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் நாளை இங்கிலாந்து அணியுடன் மோத இருக்கிறது. ஆனாலும் ஒரு சிக்கல் பாகிஸ்தான் அணிக்கு இருக்கிறது.
அதாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வரவேண்டுமாயின் போட்டியை வென்றால் மட்டும் போதாது, பாகிஸ்தான் 300 ரன்களை விளாசி இங்கிலாந்து அணி 13 ரன்களில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் பாகிஸ்தான் 450 ரன்களை எடுத்தது என்றால் இங்கிலாந்து அணியை 160 ரன்களில் சுருட்ட வேண்டும்.

இவை நடந்தாலும் கூட பாகிஸ்தான் அணியாது டாஸை வெல்ல வேண்டும். ஏனென்றால் ஒருவேளை இங்கிலாந்து அணி டாஸை வென்று முதலில் போடிங் செய்தது என்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விடும். இதனால் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியியானது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் தான் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட தங்களால் அரையிறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உசாமா மிர்.

அவர் கூறுகையில் “நாங்கள் அரையிறுதிக்கு வருவோம் என்று நம்புகிறோம். அணியின் உள்ள ஒவ்வொரு குழு உறுப்பினரும் போட்டி எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க ஆர்வமாக உள்ளனர். எங்களுக்கிடையிலான நட்புறவு மிகவும் வலுவாகவும் நட்பாகவும் இருக்கிறது.
வரும் போட்டியில் நாங்கள் அனைவரும் ஒரு சிறந்த செயல்திறனை வழங்க முயற்சி செய்கிறோம். எனது பந்துவீச்சு திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, முந்தைய போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி இடஙக போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் உசாமா மிர்.



