உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி ஒரு அதிரடி வீரராக செயல்பட்டு வருகிறார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 100 சதம் சாதனையையும் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முதல் படியாக நேற்று நடந்த இந்தியா vs தென்னாபிரிக்க போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய 49 வது சதத்தை விளாசி கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

இருந்த போதிலும் விராட் இந்த சதம் அடிப்பதற்கு வழக்கத்திற்கு மாறாக அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார். சொல்லப்போனால் 121 பந்துகளில் 101 ரன் எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்த விராட் கோலிக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தாலும் நேற்று விராட் சதம் அடித்த போது அவர் சாதனை படைக்க வேண்டும் என்று சுயநலமாக விளையாடியதாக பல ஹாஸ்டாக்குகள் சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.
Hearing funny arguments about Virat Kohli being Selfish and obsessed with personal milestone.
— Venkatesh Prasad (@venkateshprasad) November 6, 2023
Yes Kohli is selfish, selfish enough to follow the dream of a billion people, selfish enough to strive for excellence even after achieving so much, selfish enough to set new benchmarks,… pic.twitter.com/l5RZRf7dNx
அவர் போட்டிருந்த ட்விட் பதிவில் “விராட் கோலி சுயநலவாதி மற்றும் தனிப்பட்ட மைல்கற்களில் வெறி கொண்டவர் என்று வேடிக்கையான வாதங்கள் கேட்கப்படுகின்றன. ஆம் கோலி சுயநலவாதி, ஒரு பில்லியன் மக்களின் கனவைப் பின்பற்றும் அளவுக்கு சுயநலவாதி, இவ்வளவு சாதித்த பிறகும் சிறந்து விளங்க பாடுபடும் சுயநலவாதி, புதிய சாதனைகளை அமைக்கும் அளவுக்கு சுயநலம், தன் அணி வெற்றி பெறுவதை உறுதிசெய்யும் சுயநலவாதி. இதனால் கோலி சுயநலவாதி.




