இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது வங்காளதேசத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்திய அணியானது விளையாடியது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2 -1 என்ற கணக்கில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்தது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வங்காள அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் டக்வோரத் முறையில் வெற்றி பெற்றது. இதனால் அடுத்து வரும் இரண்டு போட்டிகளும் இந்திய அணிக்கு மிக முக்கியமானது என்ற நிலையில் இரண்டவது போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேச அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியா களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் ஷமிம்மா சுல்தானா மற்றும் ஃபர்கானா ஹோக் இருவரும் அற்புதமாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் ஃபர்கானா ஹோக் சதமும் ஷமிம்மா சுல்தானா அரை சத்தமும் விளாச வங்காள தேச அணியானது 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 225 ரன் குவித்தது.

இந்நிலையில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அதனையடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் எப்படியோ சமன் செய்தது இந்நிலையில் 33வது ஓவரில் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடிய கொண்டிருக்க அவர் LBW காரணமாக ஆட்டமிழந்தார். ஆனால் அம்பயரின் இந்த முடிவால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் சஸ்டெம்புகளை பேட்டினால் தாக்கினர். இதனால் இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயை பரவியது.
Harmanpreet Kaur was not happy with the decision 👀#HarmanpreetKaur #IndWvsBangW #INDvWI pic.twitter.com/ZyoQ3R3Thb
— Ajay Ahire (@Ajayahire_cric) July 22, 2023
ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியது :
இப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்து பேசிய அவர் கூறுகையில் “விளையாட்டிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டைத் தவிர இந்த மாதிரியான அம்பயர்களை கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். அடுத்த முறை வங்கதேசம் வரும்போது இந்த மாதிரியான நடுவரைச் சமாளித்து அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்தது குறித்தும் சரியாக திட்டம் போட்டு வருவோம். வங்காளதேசம் நன்றாக பேட்டிங் செய்தனர், சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்தோம்.
"I mentioned earlier some pathetic umpiring was done and we are really disappointed"
— Female Cricket (@imfemalecricket) July 22, 2023
~ Harmanpreet Kaur in the post-match presentation #CricketTwitter #BANvIND pic.twitter.com/ytdJP13Z84
நான் முன்பு குறிப்பிட்டது போல் நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சில மோசமான முடிவுகளை அம்பயர்கள் எடுத்ததாக் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அம்பயர்கள் அளித்த சில முடிவுகளால் நாங்கள் மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்று கூறினார் இந்திய மகளீர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்.




