உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது . ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து நேற்று இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே58 ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 ஒரு விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தோல்வியை தழுவியதை தாங்கி கொள்ள முடியாமல் ரசிகர்கள் பலர் அவர்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர். அதுமட்டும் இல்லமால் இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்கலங்கிய நிலையில் இருந்ததை நாம் பார்த்து இருப்போம்.
இந்திய அணியின் வீரர்கள் தோல்வியின் பிறகு மிகவும் சோகத்தில் ஓய்வறையை நோக்கி சென்றனர். சிராஜ் விராட் கோலி ரோஹித் ஷர்மா வீரர்கள் மைதானத்தில் கண்களின் நிலையில் வேகமாக ஓய்வறையை நோக்கி சென்றனர். அதன் பின் பயிற்சியாளர் திலீப் சிறந்த பீல்டருக்கான விருதை வழங்கினார் அப்போது இந்திய அணியின் வீரர்கள் மயான அமைதியுடன் இருந்தனர். எந்த ஒரு இந்திய அணி வீரர்கள் கை தட்டவில்லை மற்றும் எழுந்து நிற்கவோ இல்லை. அந்த அளவிற்கு உலக கோப்பை இறுதிப் போட்டி என் தோல்வி அவர்களை பாதித்திருக்கின்றது.
— dhilip kumar (@dhilipkumars009) November 20, 2023
மேலும் திலீப் அவர் கூறுகையில் நாங்கள் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாகவே ஃபீலிடிங் செய்துள்ளோம் அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளோம். இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஃபீலிடிங் செய்வது மட்டுமல்லாமல் அனைவருக்கும் உக்கமளிக்கும் வகையிலும் செயல்பட்ட வீரர் விராட் கோலிக்கு சிறந்த பீல்டருக்கான விருதை அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்திருந்தார். அப்போது அனைத்து வீரர்களும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தி ஜடேஜா விராட் கோலிக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை அனுவித்தார். அப்போதும் விராட் கோலி மேடலை அமைதியாக வாங்கிச் சென்றார் இந்த வீடியோ ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.




