ந்திய அணியில் மிகச்சிறந்த மேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தது வருபவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். அதோடு இவரது அதிரடி ஆட்டதாலேயே இவருக்கு ஹிட்மேன் என்ற பட்ட பெயரும் இருக்கிறது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி ரோஹித் ஷர்மா கேப்டனாகி மாறினார்.

அதற்கு பிறகு அவரது தலைமையில் இந்தியா அணியாது கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா செமி பைனல் வரையில் சென்று தோல்வியை தழுவியது. மேலும் அதற்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா பைனலில் தோல்வியை தழுவியதினால் ரோஹித் பெருமளவு விமர்சிக்கப்பட்டார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்திய ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்த நிலையில் தற்போது நடந்து வரும் IND vs WI டி20 தொடரில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு எடுத்துள்ளார்.
அப்படிப்பட்ட நிலையில் தான் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2023க்கு முன்னதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது குடும்பத்தினருடன் திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். மேலும் ஆசியக் கோப்பை 2023க்கு இன்னும் மூன்று வாரங்களுக்கும் குறைவான நேரத்தில், ரோஹித் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆசி பெற திருப்பதிக்கு விஜயம் செய்தார் இது சமூக ஊடகங்களை பெருமளவு வைரலாகி வருகிறது.
Rohit Sharma visited Tirumala Temple today with his family!!🙏@ImRo45#RohitSharma𓃵#AzadiKaAmritMahotsav #SelfieWithTiranga #HarGharTiranga #HarGharTiranga2023 #HarGharTiranga2023 #ElvishArmy𓃵pic.twitter.com/wdE8xrtgqX
— Har Ghar Tiranga 🇮🇳 (@Jagadishroyspr) August 13, 2023
இது தவிர, பல ரசிகர்கள் கிரிக்கெட் வீரருக்கு பலத்த பாதுகாப்பையும் மீறி கோவிலில் கிரிக்கெட் வீரரைக் கண்டு புகைப்படங்களை எடுத்துள்ளதுனர். அவையும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் ஐபிஎல்)2023ல் இருந்து ரோஹித் பேட்டிங்கில் மிகவும் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவினால் 16 ஆட்டங்களில் 332 ரன்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது. மேலும் அவரது சராசரி 20.75 ஆகவும் இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்ததுள்ளார்.
Rohit Sharma & his family at Tirupathi Balaji Temple ahead of Asia Cup.
— Johns. (@CricCrazyJohns) August 13, 2023
– Beautiful pictures. pic.twitter.com/5NcZuN8xhh
இது தவிர ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 இறுதிப் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அவர் முறையே 15 மற்றும் 43 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.இருப்பினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்டில் அவர் ஒரு சதத்தை அடித்தான் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆசியக் கோப்பை 2023 போட்டியானது வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது..




