உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப்பை பெற்றுவிட்டனர். அதில் இந்திய அணி ஏற்கனவே நடந்த 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்திய அணி இங்கிலாந்து அணியை லக்னோ மைதானத்தில் எதிர்கொண்டு வருகிறது இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் அது சரியானதாக இருந்தது என்றே சொல்லாம். ஏனென்றால் போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் தடுமாறிய சுப்மன் கில் 9 (13) ரன்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் எப்போதும் இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவதற்காக நிதானத்தை காட்டிய போதிலும் 9 பந்துகளை எதிர்கொண்டு டேவிட் வில்லி வேகத்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் இந்தியாவுக்கு பின்னடைவாகவும் அமைந்தது. உலக கோப்பை தொடரில் கடந்த 2011 முதல் விளையாடி வரும் அவர் டக் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 1 – 7 வரையிலான இடங்களில் களமிறங்கி அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையையும் விராட் கோலி இப்போட்டியில் சமன் செய்துள்ளார் விராட் கோலி. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலியும் ஆட்டமிழந்த நிலையில் இந்தியா 27/2 என இந்தியா இந்த போட்டியில் சுமாரான துவக்கத்தை பெற்றது.
Virat Kohli is furious with himself
— cric_mawa (@cric_mawa_twts) October 29, 2023
After his dismissal pic.twitter.com/DXWzrXofOp
அந்த நிலைமையில் மறுபுறம் தொடர்ந்து போராடும் ரோஹித் சர்மாவுக்கு கை கொடுக்கும் முயற்சித்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 (16) ரன்களில் அவுட்டானதால் இந்தியா 13 ஓவரில் 42/3 ரன்கள் எடுத்து போராடியது. இருந்த போதிலும் ரோஹித் சர்மா தன்னுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவர் அரை சதம் அடித்துள்ளார். மேலும் இந்தியா இந்த செய்தியை எழுதும் வரையில்




