அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியானது ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 தொடரில் இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் இன்று ஏற்கனவே ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணியானது இன்று மோதுகிறது. மேலும் ஆசிய கோப்பை 2023 தொடரில் ஏற்கனவே இந்தியா இறுதி போட்டிக்கு சென்று விட்டதினால் இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் வென்றி பெற்றாலும் எந்த விதமான பாதிப்பும் இந்தியாவுக்கு ஏற்படாது.
அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியில் சில அதிரடி மாற்றம் இடஙக போட்டியில் நடந்துள்ளது. குறிப்பாக விராட் கோலி, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ், பிரசாத் கிருஷ்ணா, முகமது சமி, ஷரத்துல் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது. மேலும் திலக் வர்மாவிற்கும் இடஙக போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே தடுமாறினார்கள். ஆனாலும் பின்னர் சுதாரித்து கொண்ட பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் பொறுமையாக விளையாடி 85 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். இவரோடு டவ்ஹித் ஹ்ரிடோய் 81 பந்துகளில் 54 ரன்களை விலாச பின்னர் பந்து பேட்ஸ்மேன்கள் தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்த பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை விளாசியது.
View this post on Instagram
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அதாவது இந்த போட்டியில் விளையாடாமல் ஓய்வு எடுக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மைத்தனத்தில் விளையாடி கொண்டிருக்கும் சக வீரர்களுக்கு தண்ணீர் கேன்களை கொண்டு சென்றார். அப்போது உற்சாகமாகவும் வித்தியாசமாகவும் விராட் ஓடி சென்ற வீடியோ பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவு வைரலான நிலையில் பலரும் விராட் கோலி அற்புதமான வீரர் மட்டும் கிடையாது கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் மக்களை மகிழ்விக்கவும் கூடியவர் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது விளையாடி கொண்டிக்கும் இந்திய அணியானது இந்த செய்தியை எழுதும் வரையில் ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு ரன்களை எடுத்துள்ளது.




