சச்சினின் சாதனையை சமன் செய்ய தவறிய கோலி. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் ஒரு தோல்வியை கூட தழுவாமல் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது.

இலங்கை அணி இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதில் இரண்டு போட்டியில் வெற்றி கண்டுள்ளதில் ஒன்று இங்கிலாந்து அணி மற்றும் மற்றொன்று நெதர்லாந்து அணி.இந்த போட்டியில் மட்டும் அல்லாமல் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு செல்லமுடியும் என்று தீவிர பயிற்சியுடன் இன்றைய போட்டியில் கலந்து இறங்கினார்கள்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மெண்டிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. முதல் பந்தில் ரோஹித் ஷர்மா போர் அவர்களின் சிறப்பான தொடக்கத்தை அளித்த நிலையில் அதற்க்கு பந்தில் அவர் ஆட்டம் இழந்து வெளியேற அதன் பின்பு நின்று நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மான் கில் மற்றும் விராட் கோலி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து ரன்களை குறித்து வந்தனர்.

92 ரண்களை நெருங்கிய நிலையில் சுப்மான் கில் மதுசங்க வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் மென்டீஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்தப் போட்டியில் விராட் கோலி சதத்திற்கு நெருங்கி சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 49 ஒரு நாள் போட்டிகளின் சதத்தை விராட் கோலி இன்றைய போட்டியில் சமன் செய்வார் என எதிர்பார்த்த நிலையில் 88 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி மீண்டும் அந்த வாய்ப்பை தவற விட்டார் கோலி.



