இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.

மேலும் தற்போது உள்ள இந்திய அணியானது பலமான அணியாக பார்க்கபப்டுகிறது, ஆனால் சமிபத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லிற்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்த காரணத்தினால் அவர் முன்னர் நடந்த போட்டியில் விளையாடவில்லை, சொல்லப்போனால் விராட் மற்றும் கேஎல் ராகுல் தான் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற உதவினார்கள்.
இந்நிலையில் இந்த வருட உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய அணிக்கு அது ஒரு பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது. இதனால் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தகுந்த வாறு தயார் செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமான இருப்பதினால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரரான வீரேந்திர சேவாக் இந்திய அணிக்கு ஐசிசி உதவி செய்யும் என்று கூறியுள்ளார். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் “ஐசிசியும் இந்தியாவுக்கு உதவும். குறிப்பாக இந்த உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்கள் இந்திய மைதான பராமரிப்பாளர்களால் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்தியா செமி ஃபைனல் அல்லது ஃபைனலில் விளையாடினால் அதில் இந்திய அசத்துவதற்கு தகுந்த பிட்ச்கள் தயாரிக்கப்படலாம்.
எனவே இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். மேலும் இத்தொடரின் கடைசி வரை இந்தியா விளையாடினால் அது பார்வையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்சிப் அடிப்படையில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்பது ஐசிசிக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார். இருந்த போதிலும் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் விளையாடியதினால் அவர்களுக்கும் பிட்ச் பற்றி தெரியும் என்பதினால் மைதான சாதகம் என்பதை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பார்க்கப்படுகிறது.



