உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். மேலும் அணிகள் பலவும் தங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி என்றால் அது இங்கிலாந்து அணியை கூறலாம்.ஏனென்றால் கடந்த முறை உலக கோப்பையை வென்ற நிலையில் அதனை தக்க வைத்து கொள்ள பலவிதமான திட்டங்களுடன் இங்கிலந்து அணி களமிறங்கும் என எதிர்பார்கப்பட்டது ஆனால் துரதிஷ்டவசமாக இங்கிலாந்து இந்த உலக கோப்பையின் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியது.
இதனால் காடுமையான விமர்சனங்கள் இங்கிலந்து அணி மீது வைக்கப்பட்டது. அந்த வகையில் எப்போது பார்த்தாலும் இந்திய அணியை வம்பிழுக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் பொதுவாக இங்கிலாந்து அன்னிக்கே அதிகமாக பேசுவார். அந்த வகையில் அவர் தற்போது வாயை கொடுத்து சேவாக் மற்றும் வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் வீரர்களிடம் வாங்கி கட்டியுள்ளார்.

அதாவது இந்த உலக கோப்பை போட்டியானது துவங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி சரியான பார்மில் இருப்பதாகவும் கண்டிப்பாக அது செமி பைனல் போட்டிக்கு முன்னேறும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியிருந்தார். ஆனால் முதல் போட்டியிலேயே இங்கிலந்து அணி நியூசிலாந்து அணியிடம் பெரும் தோல்வியை சந்தித்தது.
அதுமட்டுமல்லாம் ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட இங்கிலாந்து அணி அவர்களிடம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இப்படி தொடக்கத்திலேயே சொதப்பும் இங்கிலந்து அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஒரு ட்விட் செய்துள்ளார்.
Hope you're ok @MichaelVaughan #ENGvAFG #CWC23 pic.twitter.com/xm2m7oTF1r
— Wasim Jaffer (@WasimJaffer14) October 15, 2023
அந்த ட்விட் பதிவில் “1996, 1999, 2003, 2007, 2011, 2015 மற்றும் 2023 என்று குறிப்பிட்டு 8 வருடங்களுக்கு ஒரு முறை வெல்ல முடிந்தது என்று ட்விட் செய்துள்ளார். மேலும் முன்னாள் இந்திய அணியின் வீரரான வாசிம் அக்ரம் தன்னுடைய ட்விட்டரில் மைக்கேல் வாகனை டாக் செய்து விசிலடிக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து கலாய்த்துள்ளார்.



