கடந்த 2019ஆம் ஆண்டின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இந்திய அணி 2023 உலக கோப்பையயை விளையாட இருக்கிறது. இந்த முறை ரோஹித் சர்மா கேப்டனாகவும், அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதினாலும், அதோடு உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற்று மீண்டும் 3 வது முறையாக உலா கோப்பையை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலம் இருக்கிறது.

இருந்த போதிலும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற காரணத்தினால் பல நாடுகளின் அணிகளுக்கு இங்குள்ள மைதானங்கள் விக்கெட்டுகள் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இதனால் இந்திய அணிக்கும் இந்த தொடரான பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான அணிகள் எப்போதும் எங்கே போட்டியிடும் என்ற அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பிப்பதற்காக நேரம் தொடங்கிய நிலையில் பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜெய் ஷா, ஜியோஃப் அலார்டைஸ், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக், இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து மந்தரவாதியுமான முத்தையா முரளிதரன் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் போது பேசிய சேவக் விராட் கோலி குறித்து பேசினார்.

சேவாக் கூறியது :
அவர் கூறுகையில் “நாங்கள் அனைவரும் கடந்த 2011 உலக கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்காக விளையாடினோம், அவருகவே உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். அது அவருக்கும் சிறப்பான விடைபெறுதலாக இருந்தது. தற்போது விராட் கோலி சச்சின் இருந்த இடத்தில் இருக்கிறார். அவருடைய விளையாட்டு, பேச்சு, மற்றவர்களுக்கு உதவுவது, இக்கட்டான சூழ்நிலைகளை கையாளுவது போன்றவை சச்சின் போலவே எதிர்நோக்குகிறார்.

அனைவரும் அவருக்காக இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். விராட் கோலி அணிக்காக தன்னை 100 சதவிகிதம் அர்பணிக்கிறார். இந்திய அணிக்காக பலமுறை பல போட்டிகளில் விளையாடி வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். எனவே கோலியும் இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருப்பர் என நினைக்கிறேன். அகமதாபாத்தில் 100,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்ப்பார்கள், இந்த முறை அவருக்கு பெரிய அள்வில் ஆதரவு இருக்கும்.
விராட் கோலிக்கு எல்லா மைத்தனங்களின் விக்கெட்டின் நிலை பற்றியும் நன்றாகவே தெரியும். எனவே எனக்கு தெரிந்து அவர் கண்டிப்பாக அதிக ரன்களை விளாசி, இந்திய உலக கோப்பையை வெல்ல தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக கோலி செயல்படுவார் என்று சேவாக் அந்த பேட்டியில் தெரிவித்தார்.



