உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இதனால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலியை முறியடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்கு விராட் கோலியும் தன்னால் முடியும் என்று கடந்த பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் 47 வது சதம் அடித்தார். இதனால் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னமும் 2 சாதங்களே மீதம் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகமாக சாதிப்பார் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் வக்கார் யூனிஸ்.

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “விராட் கோலிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது ஒருநாள் போட்டிகளில் 29 சதங்களை அடித்திருந்தார். இந்த சமயத்தில் தம்முடைய கேரியரை முடிப்பதற்கு நீண்ட நாட்களைக் கொண்டுள்ள விராட் கோலி இன்னும் நிறைய சாதனைகளை படைப்பார் என்று உங்களிடம் நான் சத்தியமாக சொல்வேன்.
குறிப்பாக நாம் அனைவரும் நினைப்பதை விட அவர் இன்னும் அதிகமான சதங்கள் அடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும் காயத்திலிருந்து குணமடைந்த ராகுல் அப்போட்டியில் விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும் நிலைமையை சந்திப்பதற்காக வருந்துகிறேன்.

நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் விராட் கோலியால் வேகமாக ஓடமுடியும். அவர் ஒரு சிங்கிள் அல்லது எக்ஸ்ட்ரா ரன்னை கூட விட்டுக் கொடுக்க மாட்டார். பேட்டிங், ஃபீல்டிங் போன்ற அனைத்திலும் சிறப்பாக இருக்க முயற்சிக்கும் விராட் கோலி தம்முடைய ஃபிட்னஸில் விரும்பி வேலை செய்கிறார் என்று கூறியுள்ளார் வக்கார் யூனிஸ். இதற்கு முன்பு கோடா பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜமாபவான் சோயப் அக்தர் விராட் கோலி 110 – 130 சதங்கள் அடிப்பார் என்று கூறியிருந்தார்.



