உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக தெரிகிறது. சமீபத்தில் கூட இலங்கை அணியை சுலபமாக வென்றது. இந்நிலையில் இந்த வெற்றி மட்டுமல்லாமல் இந்த தொடர் முழுவதும் கிடைத்த வெற்றிகளுக்கு பேட்ஸ்மேன்களை விடவும் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர்.

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஹஸன் ராஸா இந்திய அணி மீது புதிய குற்றசாட்டு ஒன்றை வைத்துள்ளார்.சமி மற்றும் சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆலன் டொனால்ட் மற்றும் மக்காயா என்டினியுடன் விளையாடியதைப் போலவே இருக்கிறார்கள். அவர்களுடைய பந்துவீச்சில் சீம் மற்றும் ஸ்விங் இரண்டுமே இருந்தது.
அதன் ஒரு பக்கமானது பளபளப்பு கூடுதலாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், பந்து கூட மாறுகிறது என்று நான் நம்புகிறேன். பிசிசிஐ ஐசிசி அல்லது ஒருவேளை மூன்றாவது நடுவர்களுக்கு அழுத்தம் ஓடுது இந்த பந்துகளை விநியோகிக்கிறது என்று நினைக்கிறேன். இந்த பந்துகள் ஆராயப்பட வேண்டும். இது என் கருத்து என்று கூறினார் ராசா.

இந்நிலையில் அதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் வாசிம் அக்ரம். அவர் பேசுகையில் வேடிக்கையாக இருந்தது. பாகிஸ்தானை உலக அரங்கில் அவமதிக்காதீர்கள். 10 பந்துகள் கொண்ட ஒரு பெட்டியை ஒரு அதிகாரி இரண்டு ஆடை அறைகளுக்கு எடுத்துச் செல்கிறார். இரு அணிகளும் தங்களின் முதல் மற்றும் இரண்டாவது விருப்பங்களாக இரண்டு பந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட பந்துகளுடன் மீதமுள்ள பந்துகளும் மேட்ச் ரெஃப்ரியிடம் ஒப்படைக்கப்படுகின்றன, பின்னர் அவர் அவற்றை கள நடுவர்களிடம் ஒப்படைக்கிறார். இந்திய பந்துவீச்சாளர்கள் இன்னும் அதிகமாக எதையாவது செய்வதாலும், கிரிக்கெட்டின் கலையைக் கற்றுக்கொண்டதாலும் அதிக ஸ்விங் பெறுகிறார்கள் என்றார் வாசிம் அக்ரம்.
மேலும் பேசிய சோயப் மாலிக் கூறுகையில் “இந்திய பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஏதோ அங்கு குற்றம் நடப்பதாகவே எதிர்மறையாக நினைக்கிறீர்கள் என்றார் சோயப் மாலிக். மேலும் மிஸ்பா உல் ஹக் கூறுகையில் “இந்திய பந்துவீச்சாளர்கள் பேட்டர்களுக்கு பந்துவீசும்போது சீம் நிலை தொலைக்காட்சி பெட்டிகளில் தெரியும். இது கைகளில் இருந்து சரியாக வெளிவருகிறது என்றார்.




