தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட 2023 உலக கோப்பையின் அரையிறுதி கட்டத்திற்கு சென்று விட்ட இந்திய அணிக்கு சில சிக்கல்களும் உருவாகியுள்ளது. அதாவது இந்தியா vs பங்களாதேஷ் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்படுத்தினால் அவருக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டது. மேலும் வரும் போட்டிகளில் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி நியூஸிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர் 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது. மேலும் சமியின் இந்த அற்புதமான ஆட்டத்திற்கு பல முன்னாள் வீரர்களும் வாழ்த்து குறி வரும் நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அகரம் கருத்து கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் ” ஹர்திக் பாண்டியா இல்லாவிட்டாலும் இந்திய அணி தற்போது நன்றாக இருக்கிறது. இப்போது ஷமியை அணியில் இருந்து கழற்றி விடுவது கடினம். பாண்டியாவை இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவருக்கு தொடை எலும்பு அல்லது குவாட் காயம் என்றால் முதலில் நீங்கள் நன்றாக உணர்ந்தாலும் போட்டியில் உங்களுக்கு தசையை பிடடிப்பு ஏற்படலாம் எனவே அவர் 100 சதவீதம் குணமடையட்டும், பிறகு நீங்கள் அவரை விளையாடுவது நல்லது.

எப்போது அணியில் உள்ள எந்த வீரர் விளையாடும் லெவன் அணிக்குள் வந்தாலும், அவர் தயாராக இருப்பதற்காக அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். சமியின் பந்து சீமில் பட்டால், அது எந்த வகையிலும் திருப்பலாம். அதனால் தான் சமி ஆட்டநாயகனாக அந்த போட்டியில் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார் வாசிம் அக்ரம்.

மேலும் சமி குறித்து பேசிய ஸ்ரீசாந்த் பேசுகையில் “உலகக் கோப்பையில் நுழைந்து உடனடியாக களமிறங்குவது எளிதல்ல. சமி ஒரு புதிய பந்து வீச்சாளர். ஆனால் சில சமயங்களில் முதல்-மாற்றம் நடந்த பிறகு பந்துவீசும் போது நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு, ‘நான் ஏன் புதிய பந்தில் வீசவில்லை என்று நினைக்கலாம். ஆனால் அவருக்கு அனுபவம் உள்ளது மற்றும் அவர் தனது நாட்டிற்காக விளையாட்டை வெல்வதற்கான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் என்று கூறினார் ஸ்ரீசாந்த்.



