இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பலர் இருந்தும் அணிக்கு தேவையான ஒருவர் இன்னமும் கிடைக்காமல் தவித்து வருகிறது. குறிப்பாக தோனி ஓய்வு பெற்றவுடன் அவருடைய இடத்தை ஸ்ரேயாஸ் இயற் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் திறமையாகவே சமாளித்தனர். தேவைப்படும் நேரத்தில் ரன்களும் ஸ்டெம்புகளுக்கு பின்னர் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவர்கள் இருவரும் தெப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்கள்.

இதனையடுத்து கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமாருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கேஎல் ராகுலும் தற்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் கேஎல் ராகுல் உடல் தகுதி பெற்று வந்தாலும் அவருக்கு போட்டியாக இஷான் கிஷான், சூரிய குமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் உலக கோப்பையில் யார் விக்கெட் கீப்பராக வர வாய்ப்பிருப்பது பற்றி பேசியுள்ளார் வாசிம் ஜாபர் மற்றும் ஆகாஷ் சோப்ரா.
வாசிம் ஜாபர் பேட்டி :
வாசிம் ஜாபர் கூறுகையில் “சஞ்சு சாம்சன் வரும் 2023 உலக கோப்பை போட்டிக்கு தகுதியானவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் கே.எல். ராகுல் உடற்தகுதியில் மீண்டும் வந்துவிட்டல் அவர் இந்திய அணியில் முதல் தேர்வாக இருப்பார். அதன் பிறகு, சான்ஜு சாம்சன் ஒருவராக இருக்கலாம். அதே போல துவக்க ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் இஷான் கிஷான் வரும் பட்ச்சத்தில் சஞ்சு சாம்சனின் இடம் தவராக்கூடும் என்றார் வாசிம் ஜாபர்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “இந்த காரங்களில் சஞ்சு சாம்சனிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியமானது. அதனால் இந்த போட்டியில் சிறப்பாக செய்லபடவேண்டிய கட்டாயத்தில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். ஏனென்றால் சஞ்சு சாம்சனில் நிலைத்தன்மை பிரச்சினை அவருக்கு இருக்கிறது. ஆனால் அவர் அப்படி இல்லாம் பொறுப்பை எடுத்து கொண்டு விளையாடினால், அவர் அந்த இரண்டாவது விக்கெட் கீப்பராக இருக்கலாம் என்றார்.

ஆகாஷ் சோப்ரா பேட்டி :
இதே போன்று சஞ்சு சாம்சன் பற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில் “சஞ்சு சாம்சன் 4வது இடத்தில் முற்றிலும் பொருந்துகிறார். ஆனால் இஷான் கிஷானை நீங்கள் அணியில் எடுக்கிறீர்கள் என்ற திட்டத்தில் இருந்தால் அவரை நடு வரிசையில் விளையாட வைக்க வேண்டும். பின்னர் ராகுல் இல்லாத வரை நிச்சயமாக அவரை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும். இதனால் இஷன் கிஷன் நம்பர் 2 கீப்பராக இருப்பார் என்பதை உங்களினால் உறுதி செய்ய முடியும்.
ஆனால் அப்படி நீங்க்ள் நினைக்காமல் ராகுல் நடுத்தர வரிசையில் விளையாட வேண்டும். எனவே சஞ்சு சாம்சன் 100% எனது அணியில் பொருந்துகிறார். அவரின் நிலைத்தன்மை சரியாக இல்லாமல் இருந்தாலும் அவரின் செயல்திறன் சமீப காலங்களில் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே இந்தத் தொடரில் அவர் எண் 4 இல் விளையாடி ரன்களை எடுத்தால் அவரினால் கண்டிப்பாக முன்னோக்கி செல்ல முடியும். இதனால் அவர் நிச்சயமாக உலகக் கோப்பையை இடம்பெற முடியும் என்றார் ஆகாஷ் சோப்ரா.




