உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் இன்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அவர்களுக்கு இந்த வருட உலக கோப்பையானது சரியாக வரவில்லை.

கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றது. கடந்த போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியிடம் மாபெரும் தோல்வியை அடைந்தது.இலங்கை அணியை கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆனால் அவர்களுக்கு துல்லியையும் கை கொடுக்கவில்லை. கடந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்ததால் இந்த முறை முதலில் பேட்டி தேர்வு செய்தது. ஆனால் அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது.இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும் பேர்ஸ்டோ 30 ரன்கள் மலான் 28 ரன்களை அடித்தனர்.

மற்ற வீரர்கள் யாரும் சொல்ல கூடிய அளவிற்கு ரன்களை அடிக்க தவறியதால் அந்த 33.2 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் ஹைர லஹிறு மூன்று விக்கெட்டுகளையும் மேத்வ்ஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் தீக்ஷனா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் ஆதிக்கமாக இருந்தது. இலங்கையில் எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் இங்கிலாந்து அந்த தடுமாறு அனைத்து கட்டுகளையும் இழந்து மிகவும் குறைவான ரன்களை மட்டுமே அடித்தது.
157 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணையின் தொடக்க ஆட்டக்கார குசல் நான்கு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தார். ஆனால் மற்றொரு முனையில் நின்று விளையாடிக் கொண்டிருந்த நிசங்கா ரன்களும் மற்றும் சதீரா ரன்களும் அடித்து சிறப்பாக விளையாடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு தேடித் தந்தனர். நடப்பு சாம்பியன் ஆனா இங்கிலாந்து அணி இதுபோன்று தோல்வியை தழுவி கொண்டே வருகின்றது. இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் உருகி பேசி இருந்தார்.

அவர் கூறியது
“இது ஒரு நம்பமுடியாத கடினமான மற்றும் நம்பமுடியாத ஏமாற்றமளிக்கும் போட்டியாகும். எங்களைப் பற்றிய ஒரு நல்ல கணக்கை நாங்கள் காட்டாதது எனக்கும் எங்கள் அணிக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த நேரத்தில் தெளிவான பதில் இல்லை . போட்டிக்கு ஆரம்பம் சரியாக இருக்கவில்லை. உண்மையைச் சொல்வதென்றால், அறையில் நிறைய அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், அவர்கள் நிறைய அனுபவங்களைக் கொண்டுள்ளனர், நம்பிக்கையானவர்கள். நீங்கள் ஒரே இரவில் மோசமான வீரராக மாற மாட்டர்கள், மோசமான அணியாக மாற மாட்டர்கள்.

ஒரே இரவில், இது மிகப்பெரிய ஏமாற்றம் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் இதுவரை எங்களின் சிறந்த போட்டியை விட குறைவான அளவிற்கே இருந்து வருகிறோம் மற்றும் வெளிப்படையான காரணமின்றி. நாங்கள் செய்து கொண்டிருக்கும் தவறுகளை எங்களிடமிருந்து வழக்கமாக நீங்கள் பார்க்க முடியாது. நாங்கள் அடிப்படை விஷயங்களில் சரியாகச் செயல்படவில்லை. அடுத்த போட்டிகளில் என்ன நடந்தாலும் சரி முன்னோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்!” என்று கூறி இருந்தார்.



