ஐபிஎல் 2023சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றனர். இதனையடுத்து வரலாற்று சிறப்பவுமிக்க ஆஷஸ் தொடரானது வரும் ஜூன் 16அம தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி முடிவடைகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் மேலும் இந்த வருடம் 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்குகிறது.

மேலும் இந்த தொடரில் பத்து அணிகள் மோதுகின்றனர். அதற்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். அப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடியே இருக்கும் பிரச்னை நாம் அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாகத்தான் புதிதாக ஒரு பிரச்சனையானது உருவெடுத்துள்ளது.
ஏனென்றால் ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து இந்திய அங்கு விளையாட மாட்டோம் என்று அறிவித்தது. அதன் காரணமாகத்தான் பிரச்சினையே ஆரம்பித்தது. இந்த பிரச்னையை தீர்க்க பாகிஸ்தான் சில வழிகளை கூறிய நிலையில் அத்தனையும் இந்தியா மறுத்துனால் ஆசிய கோப்பை பாகிஸ்தானை விட்டு வெளியே நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் பாகிஸ்தான் தங்கள் இந்தியாவில் நடைபெறும் உலககோப்பையில் விளையாட மாட்டோம் என்று கூறியுள்ளது. இருந்த போதிலும் சில பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் விளையாட ஒப்புக்கொண்டது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தாங்கள் விளையாட போவதில்லை என்றும், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் மட்டுமே தங்கள் விளையாட விரும்புதகவும் கோரிக்கை வைத்து.
அகமதாபாத்தில் விளையாடினாள் எங்களுடைய விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் கோரிக்கைக்கி வைத்தது, அதனை இந்தியாவும் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளை அகமதாபாத்தில் உள்ள மைத்தனத்தில் நடந்த இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க மைதாங்கள் இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் நடத்துவது குறித்து பல வீரரகள் விமர்சித்தனர்.
அப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. அதாவது பாஸ்கிதான் அணி தகுதி சுற்றில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு வருவோம் என்றும் அப்படி நடக்கும் போதும் தாங்கள் அகமதாபாத்தில் விளையாட மாட்டோம் என்று கூறியுள்ளது. மேலும் அந்த போட்டிகளை வேறு மைதானத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்த்த பிசிசிஐக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது.




