இந்த வருடம் நடக்கும் உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெளியேறி இருக்கிறது. இந்நிலையில் இந்த பெரும் வரலாறு காணாத தோல்வியில் இருந்து திரும்பி வர வெஸ்ட் இண்டீஸ் அணியானது போராடி வருகிறது. அதன் முதல் முயற்சியாக இந்தியாவுடன் பல போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் கிடைத்த பெரும் தோல்விக்கு பிறகு ஒருநாள் போட்டியிலாவது வென்று விடவேண்டும் என்ற எண்ணத்தில் அணியை பலமாக தயார் செய்த்தது வெஸ்ட் இண்டீஸ். குறிப்பாக 2 வருடங்கள் கழித்து அவர்களின் அதிரடி வீரரான கையில் மேயர்ஸை களத்தில் இருக்கிறது. இவர் ஐபிஎல் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் டி20 போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்தியாவிற்கு எதிராக நடந்த இந்த போட்டியில் கையில் மேயர்ஸ் வரும் 11(19) ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பல அதிரடி வீரர்கள் ரன்கள் எதுவும் எடுக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். சொல்லப்போனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் மட்டுமே கொஞ்சம் நேரம் தாக்குபிடித்து 43(45) ரன்களை விளாசினார்.

ஷாய் ஹோப் வருத்தம் :
இப்படிபட்ட நிலையில் தான் இந்த தோல்விக்கு பிறகு பேசிய அவர் கூறுகையில் “இந்த தோல்வி குறித்து எனக்கு அதிக வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை அது மட்டும் சரியாக தோன்றுகிறது. இதுபோன்ற கடினமான ஆடுகளங்களில் ரன்களை அடிக்க வழிகளைக் நாங்கள் கண்டறிய வேண்டும். நான் சாக்கு போக்கு சொல்லவில்லை ஆனால் கிரிக்கெட் பார்க்கும் யாராக இருந்தாலும் இங்கு என்ன நடக்கிறது என்று அவர்களால் கூற முடியும்.

ஜேடன் சீல்ஸில் ஒரு தரமான வீரர், நாம் நம்பிக்கை வைக்கும் வீரர்களின் அவரும் ஒருவர். அவரை அணியில் வைத்திருப்பது எப்போதுமே அணிக்கு வலிமை சேர்க்கும் எ.ன்று நம்புகிறேன். இந்த மைத்தனத்தின் மேற்பரப்பை பயன்படுத்தி பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை சரியாக எடுத்தனர். ஆனால் நாங்கள் தான் பேட்டிங் சரியாக செய்யவில்லை என்றார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்.

இதே போன்று தான் ரோஹித் ஷர்மாவும் பந்துவீச்சார்களுக்கு சரியான மைதானம் என்றும் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததாகவும் அவர் கூறினார். அதயே தான் ஷாய் ஹோப் கூறியுள்ளார். இந்நிலையில் இரண்டாவது IND vs WI ஒருநாள் போட்டியானது நாளை மாலை இந்திய மணியளவில் 7.00 மணிக்கு நடக்க இருக்கிறது.




