கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி இந்த முறை இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் தடுமாறி வருகிறது. 6 போட்டிகளை விளையாடியுள்ள இங்கிலாந்து அதில் 1 போட்டியை மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் அகலபாதாளத்தில் 10 வது இடத்தில் இருக்கிறது. இதனால் இங்கிருந்து மீண்டு வருவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த இந்தியாவை எதிகொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலக கோப்பையில் முதன் முதலாக இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. அது அவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே அடித்தது.
230 என்று இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து இந்தியாவின் பந்து வீசை சமாளிக்க முடியாமல் 34.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை என்பது குறைவாக இருந்தது போல தெரிந்தது. மேலும் விக்கெட் விழுந்ததும் அதற்கு அடுத்து நிறுத்தி ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலந்தின் தோல்விக்கு காரணமாகியது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் கிறிஸ் வோஸ்க் கூறுகையில் “நிமிடத்தில் கொஞ்சம் நம்பிக்கையை எங்காவது வாங்க முடிந்தால், அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்போம். நம்பிக்கையை ஒரு பாட்டிலுக்குள் அடைப்பது கடினம். உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது, நீங்கள் சில மோசமான ஷாட்களை விளையாட முனைகிறீர்கள் அல்லது சில மோசமான முடிவுகளை எடுக்க முனைகிறீர்கள் என்றார் வோக்ஸ்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “எங்களுடைய இந்த தோல்வியை பின்னோக்கி திரும்பிப் பார்ப்பது எளிது, நாம் இன்னும் தற்காலிகமாக அல்லது அதிக விவேகமாகச் சென்றிருக்க வேண்டும் என்று கூறலாம். அந்த ஸ்கோரை நெருங்குவதற்கு நாங்கள் இன்னும் சில பாட்னர்ஷிப்பு களை உருவாக்கி இருக்க வேண்டும். நாங்கள் அதைச் செய்யவில்லை என்றார் கிறிஸ் வோக்ஸ்.



