
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இதில் 14 போட்டியில் லக்னவில் உள்ள ஏக்னா மைதானத்தில் என் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதினர்.இதில் இரண்டு அணிகளும் வெற்றி பெற மும்முரத்தில் இருந்தனர்.

இதில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது. ஆனால் அதற்கு பலன் கொடுக்கவில்லை. ஸ்ரீலங்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து சிறந்த அடித்தளமாக நிஸ்ஸாங்க 61 ரன்கள் மற்றும் குசல் பெரோர 78 ரன்களிலும் அடித்திருந்தார்கள். ஆனால் அதன்பின் வந்த யாவரும் நிலைத்து நின்று விளையாடாமல் இருந்தனர்.
அசலங்கா மட்டும் 25 ரன்கள் அடித்து இருத்த நிலையில் மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்துடனே வெளியேறி இலங்கை அணிக்கு பெருமை ஏமாற்றத்தை அளித்தனர்.ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் நான்கு விக்கெட் களையும் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட், கம்மின்ஸ், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியா ஒரு எளிதான டார்கெட் செட் செய்தார்கள்.ஸ்ரீலங்கா அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 209 ரகளை மட்டுமே அடித்து இருந்தது.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி வென்று களம் இறங்கி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்களிலும் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறு அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தனர்.மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த மிச்சல் மார்ஷ் 52 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். அதன் பின் வந்த மார்னஸ் லாபுசாக்னே 40 ரன்களின் அவரும் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இங்க்லீஷ் 58 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். மேக்ஸ்வெல் 31 ரன்களிலும் ஸ்டாய்னிஸ் 20 ரன்களும் எடுத்த நிலையில் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இலங்கை அணி சார்பாக தில்சன் மூன்று விக்கெட்டுகளையும் துனித் வெல்லலகே ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வைத்து இருந்தனர். ஆஸ்திரேலிய 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் தோல்வியில் இருந்து ஆஸ்திரேலியா அணி தற்போது மீண்டுள்ளது.




