வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதனால் பலரும் இந்திய அணியின் இந்த பர்மிற்கு விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் அந்த தோல்விக்கு காரணம் வீரர்களை இந்தியா சோதித்த காரணம் தான் என்று கூறப்படுகிறது. குறிப்பிடதக்க வகையில் இந்த சோதனையில் இஷான் கிஷான் மிகவும் சிறப்பாக விளையாடினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இஷான் கிஷான் முதல் போட்டியில் 52(46) ரன்களும், இரண்டாவது போட்டியில் 55(55) ரன்களும், மூன்றவது போட்டியில் 77(64) ரன்களையும் விளாசினார். இதனால் IND vs WI ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதையும் பெற்றார் இஷான் கிஷான்.
மேலும் வரும் உலக கோப்பை போட்டிக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் தேவைப்படும் நிலையில் இஷான் கிஷான் அல்லது சஞ்சு சாம்சன் இருக்கின்றனர். ஆனால் இஷான் கிஷனுக்கே வரும் உலக கோபப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆடிக்கொண்டிருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. அதாவது விக்கெட் கீப்பராக இருந்த இஷான் கிஷான் டெம்பிங் செய்ய வந்து பின்னர் ரன் அவுட்டாக்க முயற்சி செய்தார், ஆனால் பேட்ஸ்மேன் அந்த நேரத்தில் ஆட்டமிக்க வில்லை
We love you, Ishan 🤗 @JioCinema #WIvsIND #CricketTwitter pic.twitter.com/UnzHz1pth1
— Aakash Chopra (@cricketaakash) August 1, 2023
இந்நிலையில் அந்த போது வர்ணனை செய்து கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் வீரரான சோப்ரா “பொதுவாக ஸ்டெம்பிங் செய்ய வந்து பின்னர் அவுட் செய்வது என்பது ஒரு அரிதான விஷயம் தான். நான் பார்த்தவரையில் பேட்ஸ்மேன் கால் கோட்டிற்குள் தான் இருந்தது. நீங்க்ள் ராஞ்சியில் இருந்து வரலாம், ஆனால் உங்களுடைய பெயர் எம்,எஸ்.தோனி கிடையாது என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக இஷான் கிஷான் “அப்படியிருந்தால் பரவாயில்லை” என்று கூறினார். அதற்கு ஆகாஷ் சோப்ரா எவ்வளவு இனிமையான ஒரு பையன், நாங்கள் உங்களை நேகிக்கிறோம் என்று குறி வாழ்த்தினார் ஆகாஷ் சோப்ரா. இது எதிர்பாராத விதமாக நடந்த விஷயமாக இருந்தாலும் சுவாரசியமாக இருந்த காரணத்தினால் ஆகாஷ் சோப்ரா இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



