தோனி மற்றும் யுவராஜ் சிங்கை தெரியாதவர்கள் கிரிக்கெட்டில் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு இந்தியாவின் கிரிக்கெட் பிரதிபலிப்பாக இருந்து வந்தனர். சொல்லப்போனால் கடந்த 2011 உலக கோப்பை போட்டியில் யுவராஜ் அப்படிப்பட்ட உடல் நிலையிலும் இந்திய அணிக்காக ஆற்றிய பங்கு மிகப்பெரியது. ஆனால் அதற்கு பிறகு யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக தொடங்கினார்.

ஆனால் தோனியையும் யுவராஜ் சிங்கையும் மைதானத்தில் பார்க்கும் போது இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல தான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் அதை மறுத்து அதிர்ச்சி தரும் விஷயத்தை கூறியுள்ளார் யுவராஜ் சிங். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை, நாங்கள் கிரிக்கெட் காரணமாக நண்பர்களாக இருந்தோம்.
ஒன்றாக விளையாடினோம் தோனியின் வாழ்க்கை முறை என்னுடையதை மிகவும் வித்தியாசமானது, அதனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை, நாங்கள் கிரிக்கெட்டினால் மட்டுமே நண்பர்கள். நானும் தோனியும் மைதானத்தில் 100%க்கு மேல் நம் நாட்டுக்கு கொடுத்தோம். அதில், அவர் கேப்டன், நான் துணை கேப்டன், நான் அணிக்கு வரும் போது, 4 வயது ஜூனியர்.. நீங்கள் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருக்கும்போது முடிவு வேறுபாடும்.

சில நேரங்களில் அவர் எனக்குப் பிடிக்காத முடிவுகளை எடுத்தார், சில சமயங்களில் நான் அவருக்குப் பிடிக்காத முடிவுகளை எடுத்தேன். எல்லா அணிகளிலும் அதுதான் நடக்கும். நான் என் கேரியரின் முடிவில் இருந்தபோது, என் கேரியரைப் பற்றி சரியான ஒரு நினைவு கிடைக்காதபோது, நான் அவரிடம் ஆலோசனை கேட்டேன், தேர்வுக் குழு இப்போது உங்களைப் பார்க்கவில்லை என்று என்னிடம் அவர் சொன்னார். அப்போது ஒருவராவது எனக்கு யதார்த்தத்தை கூற இருக்கிறார்கள் என்று நினைத்தேன்.
உங்கள் அணியினர் களத்திற்கு வெளியே உங்களின் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வாழ்க்கை முறை, திறமைகள் உள்ளன. குறிப்பிட்ட நபர்கள் குறிப்பிட்ட நபர்களுடன் பழகுவார்கள், நீங்கள் அனைவருடனும் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எந்த அணியாக இருந்தாலும், பதினொரு பேரும் ஒத்துப்போவதில்லை. எனவே உங்களுயை ஈகோவை தூரத்தில் வைத்துவிட்டு அணிக்காக விளையாட வேண்டும்

காலத்தில் அவருக்கு நானும் எனக்கு அவரும் சில உதவிகளை செய்து கொண்டோம். பின்னர் அவர் ஓய்வு பெற்றவர், நான் ஓய்வு பெற்றவன். நாங்கள் சந்திக்கும் போது நண்பர்களாக மட்டுமே சந்திப்போம், ‘உன்னை நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை’ என்பது போல் அல்ல. ஒன்றாக ஒரு விளம்பரம் படமாக்கினோம், கடந்த காலங்களைப் பற்றி பேசி மகிழ்ந்தோம் என்றார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்.




