இந்திய அணி இந்த மூவரையும் அணியில் சேர்த்தால் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வெல்லலாம் என்று ஜாகீர் கான் கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது நேற்று கோலாகலமாக இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் கடந்த 2019 வருடம் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும் கடந்த 2019ல் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோத இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியானது வரும் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது சென்னையில் உள்ள புகழ்பெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனால் சென்னை ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் 2023 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் வெற்றியை காண ஆவலுடன் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கின்ற்றனர்.
ஜாகீர் கான் கூறியது:
ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேத பந்தில் ஜாகீர் கான் தன்னுடைய கருத்தை பற்றி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் “நீங்கள் சென்னையில் விளையாடும் போது முதல் பேசும் பொருள் எதுவென்றால் நீங்கள் முதலில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். மேலும் கூறியவர் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து பும்ரா மற்றும் சிராஜ் சேர்ந்து மூன்றாகப் பந்துவீச்சாளர்களையும் பணியில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மூன்று சுழற்ந்து பந்து வீச்சாளர்களும் இடம் பெறும் பொழுது ஷர்தூல் தாக்கூர் அவரது இடத்தை இழப்பார் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். நீங்கள் பொதுவாக மெதுவான மற்றும் டர்னிங் விக்கெட்டை தொடர்பு படுத்துகிறீர்கள். ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகிய மூவரும் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள். அவர்களிடம் சிறந்த பந்து வைத்து தாக்குதல் உள்ளது.

ஆஸ்திரேலியா சுழற்பந்தத்துக்கு எதிராக அவர்கள் விளையாட்டை பார்த்தோம் அவர்கள் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளித்தனர் என்று நாம் பார்த்து வந்தோம். ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்தார்கள். இருப்பினும் பந்து திரும்பாத விக்கெட் கிடைத்த மூன்றாவது போட்டியில் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள் எனவே சென்னை மூன்று சுழற் பந்து ஆட்டக்காரர்களுடன் களமிறங்க வேண்டும் என்றும் ஜாகீர் கான் கூறி இருக்கிறார்.



