இங்கிலாந்து அணியானது கடந்த சில ஆண்டுகளாக பலமான டெஸ்ட் இருந்து வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் சமீபத்தில் நடந்து மூடிடன்ஹா ஆஷஸ் தொடரில் மியாகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலந்து கிட்டத்தட்ட தொடரை இழக்கும் நிலையில் இருந்து அப்படியே தொடரை வெல்லும் நிலைக்கு சென்றது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அந்த வெற்றியுன் மூலம் இங்கிலாந்து அணியானது தங்களுடைய மண்ணில் ஆஷஸ் தொடரை இழக்காமல் 21 ஆண்டுகளாக விளையாடி சாதனை பிடைத்துள்ளது.

மேலும் ஆஷஸ் போட்டிக்கு முன்னதாக நடந்த பாகிஸ்தான்ம், நியூசிலாந்து போன்ற தொடர்களிலும் இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. ஆனால் இந்தியாவில் மட்டும் இங்கிலாந்து தொடரை வெல்ல முடியாமல் கடந்த 11 வருடங்களாக இருந்து வருகிறது. குறிப்பாக கண்ட 2012ஆம் ஆண்டு இந்திய மண்ணில் வெற்ற இங்கிலாந்து அதற்கு பிறகு வெல்ல முடியவில்லை. இதற்கு பலரும் ஸ்பின் உள்ள மைதாங்களை இந்தியா தேர்வு செய்கிறது என்று விமர்சனத்தை வன்னமாக இருக்கிறது.
ஏனென்றால் இந்திய மண்ணில் கலக்கும் அஸ்வின், ஜடேஜா போன்றோர் இங்கிலாந்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். ஆனாலும் நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளில் கலக்கிய இங்கிலாந்து இந்தியாவிலும் அதையே செய்ய முடியும் என்று நம்புவதாக பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் தான் இங்கிலாந்து அணியின் வீரர் ஜாக் கிராவ்லி இந்தியாவில் விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் பற்றி பெரிதாக தெரியாது. சில நேரங்களில் இந்தியாவில் லேசான ஸ்விங் மற்றும் பேஸ் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் அசத்தும் அளவுக்கு அவர்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர். எனவே அதற்கு சாதகமாக இருக்கக்கூடிய சில பிட்ச்கள் அத்தொடரில் இருக்க வாய்ப்பு ஆத்திகம். ஆனால் அவை தான் எங்களுக்கு அதிகமாக பொருந்தும்.
மேலும் சில டி20 போட்டிகளில் விளையாட செல்லும் நாங்கள் அங்குள்ள சூழ்நிலைகளில் அணி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேம். ஒருவேளை சுழலுக்கு சாதகமாக அங்குள்ள மைதானங்கள் இருந்தால் நாங்கள் அதை சிறப்பாக எதிர்கொள்வோம் என்று நினைக்கிறேன். எனவே அத்தொடரின் வெற்றி என்பது நாங்கள் இந்தியாவின் மைதானங்களில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் அடையாளம் தெரியாத மைதானங்கள் இருக்கின்றன. மேலும் கடந்த முறை தாறுமாறாக சுழன்ற அகமதாபாத், சென்னை போன்ற மைதானங்கள் இம்முறை இருக்குமா என்பது எனக்கு தெரியாது என்றார் ஜாக் கிராவ்லி. அவர் சொன்னதை போல இந்தியாவில் சில மைதாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சிறந்தவையாக இருக்கும், எனவே அந்த மைதானத்தில் வெளியே இருந்து வரும் அணிகள் தடுமாறுவது வழங்கமான ஒன்றுதான்.



