உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடத்தில் மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்று தகுதி வாய்ந்துள்ளது.

மற்றொரு பக்கம் தென்னாபிரிக்க அணி நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி தழுவிய நிலையில் புள்ளி பட்டியலில் வலுவான நிலையில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் அந்த அணியும் அரை இறுதி சுற்றிக்கு தகுதி பெற பெற்றுவிடும். இன்றைய போட்டியில் அது மட்டுமல்லாமல் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு பிறந்த நாள்.பிறந்தநாள் அன்று சதத்தை பூர்த்தி செய்து சச்சினின் சாதனையை சமன் செய்வாராக எந்த ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இணைந்து தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களை பந்தாடிவந்தனர். முதலில் விராட் கோலி அரசகத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் அதன் பின்னரே ஷ்ரேயஸ் ஐயரும் அரை சதத்தை பூர்த்தி செய்து விட்டார். ஷ்ரேயஸ் ஐயர் 77 ரன்களில் இழந்து வெளியேறினார். அதன் பின் கே.எல்.ராகுல் 8 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

மற்றொரு பக்கம் தினமாக விளையாடி வந்த விராட் கோலி தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். அதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிகம் சதம் அடித்த சச்சினின் சாதனையை அவர் சமன் செய்து உள்ளார். இந்த மாபெரும் சாதனையை அவர் பிறந்தநாளில் முடித்து பெரும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது.
327 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 83 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.தென்னாபிரிக்கா அணியின் அதிக பட்சமாக ஜான்சன் 14ரன்களும், ரஸ்ஸி வான் டெர் டுசென் 13 ரன்களும் டேவிட் மில்லர் 11 ரன்களை மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 வவிக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இந்திய அணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தது. தோல்வி குறித்து பாவுமா கூறுகையில்,

நாம் சவாலை அறிவோம், சேஸ் செய்யும் போது நம்மைச் சுற்றியுள்ள கதைகளை அறிவோம். பேட்டிங் குழுவாக அதைப் பற்றி பேசும்போது, நேர்மையாக இருக்க வேண்டும். முதல் பத்து ஓவர்கள் பந்து வீச்சு சவாலாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் நன்றாக செய்தோம். மிகப்பெரிய சவால் விக்கெட்டுகளை வீழ்த்தியது மற்றும் இந்தியா பெரிய ஸ்டேன்ட்களை உருவாக்கியது. நிலைமைகள் மிகப்பெரிய கற்றலாக இருந்தது. நாங்கள் விளையாடுவதை சந்தேகித்தபடி விக்கெட் விளையாடியது – அது மோசமடையும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் நாங்கள் சரியாக பொருந்தவில்லை. அதற்கேற்ப நமது திறமைகளை மாற்றிக் கொள்வது நம் கையில் இருக்கும்.




