உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 41வது போட்டியை இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இலங்கையின் இந்த உலக கோப்பை சுற்றில் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு ஒரு வெற்றி தேவைப்படுகின்றது புள்ளி பட்டியல் அரை இறுதி சுற்றுக்கு செல்ல.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதற்கு ஏற்றார் போல நியூசிலாந்து அணி இலங்கை அணி 171 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. இலங்கை அணி அதிகபட்சமாக பரேரா 51 ரன்களையும் தீக்ஷனா 38 ரண்களும் டி சில்வா 19 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். எனவே இலங்கை அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது.
நியூசிலாந்தின் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வேலை செயல்பட்டனர். போல்ட் மூன்று விக்கெட்டுகளையும் லாக்கி பெர்குசன், சண்டனர் மற்றும் ரவீந்திர தலா இரண்டு விக்கெட்டுகளையும் சவூதி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 172 ரன்கள் இலக்காக் கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 23.2 அவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் அதிகபட்சமாக கான்வே 45 ரன்கள் மிட்சல் 43 ரன்களையும் ரச்சின் 42 ரன்களையும் குவித்து இருந்தனர். எனவே நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் பின் நடக்க இருக்கும் பாகிஸ்தான் இங்கிலாந்தின் போட்டியில் பாகிஸ்தான் இலங்கை இங்கிலாந்து அணியை 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணியை அரைஇறுதி சுற்றில் மோதும் இல்லையென்றால் நியூசிலாந்து அணி தகுதி பெறும். இது குறித்து பேசிய வில்லியம்சன்
நிஜமாகவே இது சிறப்பான ஆட்டம். ஆரம்ப விக்கெட்டுகளும் சவாலாக இருந்தது. விக்கெட் வேகம் குறைந்தது, இரண்டாவது பாதியில் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். கொஞ்சம் வானிலை மாற்றம் இருக்கும் என்று நினைத்தோம் ஆனால் எதுவும் இல்லை. இலங்கை வலுவாக இருக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். பெரேரா மேலே பலமாக இருந்தார், ஆனால் நாங்கள் எடுத்த விக்கெட்டுகள் அவர்களை கட்டுப்படுத்தியத்தில் அவர்களால் அதிகம் ரன்களை அடிக்க முடியவில்லை.

சீமர்களுக்கு அதிகம் இல்லை ஆனால் அவர்கள் அதை வலுவாக வைத்திருந்தனர். போட்டியில் ஐந்தாவது மற்றும் ஆறாவது சுழற்பந்து வீச்சாளர்களைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்ற புள்ளிகளில் முடிவடையும் சில அணிகள் உள்ளன. நாங்கள் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையில் இருப்போம், என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. குறிப்பாக பின்புறம் மிகவும் நெருக்கமாக உள்ளது. அரையிறுதியில் விளையாடுவது சிறப்பு ஆனால் இந்திய அணியுடன் விளையாடுவது சவாலானதாக இருக்கும். அதைப் பெறுவதற்கான அதிர்ஷ்டம் நமக்கு இருந்தால் அதை எதிர்நோக்குகிறோம்.என்றும் அவர் கூறியிருந்தார்.




