உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில், மூன்றாவது நாளில் திரும்பிய இந்திய அணி, மூன்றாவது நாள் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதாவது 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இன்றைய நாள் இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சிறப்பாகவே அமைந்தது. இந்திய அணியில் இருந்து மூன்றாவது நாளில், அஜிங்க்யா ரஹானே சிறப்பாக பேட்டிங் செய்து 89 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைத்து அற்புதமாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக மீண்டு வந்துள்ளது
மேலும் இந்த போட்டியின் 3வது நாளிலே அவர்க்குக்கு விரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அன்ஹா காயத்திற்கு போட்டியில் இடையே சிகிச்சை அழித்துக்கொண்டு தொடந்து விளையாடி இந்தியாவிற்கு போட்டியில் திரும்பி வர உதவி செய்தார். அதே நேரத்தில், அஜிங்க்யா ரஹானே சதத்தை தவறவிட்டார், ஆனால் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ரஹானேவை ஆட்டமிழக்க ஒரு சிறந்த கேட்ச் பிடித்தார் என்பது குறிப்பிதக்கது.

ரஹானே கூறியது :
இந்த நிலையில் தான் நேற்று இன்னிங் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் “விரல் கொஞ்சம் வலியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்னால் அதனை சமாளிக்க முடியும். அந்த விஷயம் என்னுடைய பேட்டிங்கை பாதிக்காது என்று நினைக்கிறேன். நான் இந்த போட்டியில் பேட்டிங் செய்த விதம் எனக்கு பிடித்திருந்தது. இன்று எனக்கு நல்லதாக முடிந்தது. நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது 320 லிருந்து 330 ரன்கள் வரையில் கொண்டு செல்லலாம் என்று நினைத்தோம். இருந்த போதிலும் நாளின் முடிவு நல்லதாக அமைந்துள்ளது.

அனைவரும் விளையாடினார்கள். கேமரூன் க்ரீன் என்னை ஆட்டமிழக்க செய்த கேட்ச் மிகவும் அற்புதமானது. அனைவருக்கும் தெரியும் அவர் ஒரு அற்புதமான பில்டர் என்று. அதுமட்டுமல்லமல் அவற்றினால் அதிக இடத்தை கவர் செய்ய முடியும். இந்த இந்தபோட்டியில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. எனவே எங்களுக்கு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. நாளை முதல் ஒரு மணிநேரம் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
எங்களுக்கு தெரியும் சில வேடிக்கையான நிகழ்வுகள் நடக்கும் என்று. அவற்றில் சில இந்த போட்டியில் நடந்து விடாது என்றார் ரஹானே. மேலும் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பாக பந்துவீசினார் என்றும் அவருடைய ன்பவம் சிறப்பா ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்தை ஆட்டமிழக்க ஸ்டியா உதவியது என்றும், நாளை மிகவும் முக்கியமான நாள் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று அவர் கூறினார்.





