பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுன்டர் சோயப் மாலிக் பாகிஸ்தான் அணிக்கு பல முக்கிய தருணங்களில் பாகிஸ்தான் அணியை அவர் வெற்றி பெற வைத்துள்ளார். தற்பொழுது இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து பற்றி வெளியேற செய்திகளுக்கு மத்தியில் அவர் நடிகை சனா ஜாதத்துடன் திருமணம் செய்ய செய்து கொண்டார். இவருடைய திருமணம் தான் உலகெங்கிலும் தற்போது பேச பொருளாக இருந்து வருகிறது.

பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான இவர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு அறிவித்தார். ஆனால் டி20 தொடர்களில் மட்டும் அவர் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வருகிறார் சிறப்பான ஆட்டத்தால் இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் அவர் பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். விவாகரத்து பற்றி பல நாட்கள் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாகிஸ்தான் நடிகை அவர் திருமணம் செய்து கொண்டார்.

அவரது இரண்டாவது திருமணத்தின் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறுகையில், எங்கள் முன்னாள் வீரர் ஒருவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இன்று, எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்த திருமணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பற்றியது. யார் சரி, யார் தவறு என்று பல யூகங்கள் உள்ளன. இது யாருடைய பிரச்சினையும் அல்ல. இருப்பினும், அவர்கள் தங்கள் சொந்த வேலையைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வமாக இருப்பது போல் தெரிகிறது.

இது பார்வையாளர்கள் மற்றும் விருப்பங்களுக்காக மட்டுமே. சமூக ஊடகங்கள் சில நேரங்களில் நன்றாக இருக்கும், ஆனால் அது சில தீமைகளையும் கொண்டுள்ளது, மேலும் இது நிறைய தவறிவிட்டது. மக்கள் சமூக ஊடகங்களைப் பெற்றுள்ளனர், ஆனால் கல்வியறிவு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. சிந்தனை செயல்முறை முதிர்ச்சியடையவில்லை. என்றும் அவரது இரண்டாவது திருமணம் குறித்து அவர் கூறியுள்ளார்.




