ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் அனைவரும் விரும்பமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் மோதி கொண்டது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டி பாதியில் நிறுத்தபப்ட்ட நிலையில் இரண்டு அணிகளுமே தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நிலையில் தான் இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து சிறந்த துவக்கத்தை கொடுத்தார் ரோஹித் சர்மா. மறுபுறம் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் வேகமாக ரன்களை சேர்த்தார். இதனால் இந்த ஜோடி 17 ஓவர்கள் வரை நிலையாக நின்று பாகிஸ்தான் அணியின் பமதுவீச்சாளர்களின் பந்துகளை பறக்க விட்டனர் . மேலும் 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.

இதில் ரோஹித் சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவவர்களில் மறுபுறம் 10 பவுண்டரியுடன் அசத்திய சுப்மன் கில் 52 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டதால் 24.1 ஓவரில் இந்தியா 147/2 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் வந்து போட்டியை நிறுத்தியது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. அதாவது இந்த போட்டியில் 0 ரன்களில் சுப்மன் கில் இருந்த போது கொடுத்த கேட்சை ஷாஹீன் அப்ரிடி தவற விட்டு சொதப்பினார். அதை பயன்படுத்திய கில் நேரடியான ஆட்டத்தை துவங்கி 30 ரன்களில் இருந்த போது மீண்டும் நாசீம் ஷா வீசிய 8வது ஓவரில் பவுண்டரி அடிக்க முயற்சித்து எட்ஜ் கொடுத்தார். இருப்பினும் சரியாக அடிக்க தவறியதால் நேராக ஸ்லிப் ஃபீல்டர்களை நோக்கி பந்து சென்றது.
Iftikhar Ahmed, what were you doing there? 😂😂😂😂 #INDvsPAK #IndiavsPakistan #IndiavsPak #AsiaCup pic.twitter.com/isilAYarw5
— (Positive) AboePP (@aboepp05) September 10, 2023
ஆனால் அந்த பந்தை பிடிக்க வேண்டிய இப்திகார் அகமது 2வது ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த சல்மான் ஆஹா பிடிப்பார் என்று கையை முன்னோக்கி எடுத்து சென்று விட்டுவிட்டார். மறுபுறம் அதை அவர் பிடிப்பார் என்று கையை முன்னோக்கி எடுத்துச் செல்லாமலேயே சல்மானும் விட்டுவிட்டார். இதனால் விக்கெட் விழும் வாய்ப்பு தவறியது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் பலரும் பாகிஸ்தான் அணியின் பீல்டிங்கை விமர்சித்து வருகின்றனர்.




