உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகிறது . இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு இருகின்றது. இந்திய அணி டாஸ் வென்று பௌலிங் செய்து வருகிறது.

இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகலும் உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று விவாதமும் தற்போது எழுந்துள்ளது.
விராட் கோலி பற்றி பேசிய பாக்.வீரர்கள்
இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலி பற்றி கேள்விக்கு பதில் அளித்தார்கள் அதில் கூறிய இமாம் உல் ஹக் நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். அவர் தோல்வியை எப்போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்.
தொடர்ந்து சண்டை செய்வார் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு உள்ள வீரர்களே ஸ்லாட்ஜிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். விராட் கோலி போல பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கலாம் ஆனால் அவரைப் போல வெறி மன வலிமை யாருக்கும் கிடையாது. விராட் கோலி முன்பு போல் தற்போது இல்லை. அவர் மிகவும் எப்போது அமைதியாகிவிட்டார்.

அதன்பின் பேசிய பாகிஸ்தான அணியின் பந்துவீச்சாளர் ஷதாப் கான் கூறுகையில் விராட் கோலியை போன்று ரன் அடிக்க வேண்டும் என்ற பசியை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. அவர் மிகப்பெரிய ஜாம்பவான் தான் என்று கூறி இருந்தார். அவருக்குப் பின் பேசிய ரிஸ்வான் விராட் கோலி முதலில் பத்து முதல் பதினைந்து பந்துகளை விளையாடிவிட்டால் அதன் பின் அவர் அபாயகரமானவராக மாறி விடுவார் என்றும் பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலியை புகழ்ந்து தள்ளினர்.



