
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடர்களை விளையாடி வருகின்றது. இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஈடு கட்டும் வகையில் இந்திய அணி இந்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதில் நேற்றுடன் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இறண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் இந்திய நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியது . நேற்றைய தொடர் ஆனது அசாம் மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கட்டுகளை மட்டுமே எழுந்து 222 ரன்களை குவித்தது.
223 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் இறுதி வரை போராடி ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவு 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 104 ரன்களுக்கும் ஹெட் 35 ரன்களும் வேட் 28 ரன்களை குவித்திருந்தனர்.

எனவே ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னாய் இரண்டு விக்கெட்களையும் ஆவேஷ் கான் அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தனர். மேக்ஸ்வெல் கடைசி வரை போராடி இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார். இது குறித்து பேசிய நேஹரா கூறுகையில்,
அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்தால் அவர் எப்பொழுதும் இது போன்ற அதிரடியாக விளையாடுவார் என்று தெரிகிறது. சேச்சிங் போது அவர் அதிகமாக தன்னை நம்புகிறார் அதை நாம் இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் கூட பார்த்திருப்போம். அவருக்கு எப்போதும் மெதுவான காரியங்களை செய்ய விருப்பம் இருக்காது. அவர் எப்பொழுதும் கடினமான காரியங்களை செய்வதற்கு தன்னை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அதை செய்து காட்டியுள்ளார்.

மேக்ஸ்வெல் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் கோப்பையை வென்று மகிழ்ச்சியாக வீடு திரும்பியிருப்பார் ஆனால் அது மட்டுமல்லாமல் அவருக்கு தற்போது இந்தியாவில் மற்றுமொரு ஒரு சதம் அடித்தது அவருக்கு மீண்டும் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அவரது போன்ற பேட்டிங் செய்வது இது முதல் முறை கிடையாது அவர் தொடர்ந்து இது போன்று விளையாட்டுகளை விளையாடி வருகிறார். இவரைப் போன்ற ஒரு வீர அணியில் இருந்தார் அவர் விளையாடும் ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகள் இது போன்ற அடிக்க சொல்ல மாட்டேன் அவர் விளையாடும் எட்டுப் போட்டிகளில் இது போன்று இரண்டு போட்டிகளை விளையாடினால் அதுவே போதுமானதாக இருக்கும். என்றும் அவர் கூறியிருந்தார்.





