உலகத்திலேயே மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் சமீபத்தில் தொடங்கி தற்போது சுறுசுறுப்பான நிலைமையை எட்டியுள்ளது. ஒவ்வொருரு அணியம் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியதினால் அவர்களின் தன்னம்பிக்கையும், பலமும், பலவீனமும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், குஜராத், லக்னோ, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 10 அணிகள் பலபரிட்ச்சை நடத்துகின்றனர்.

இந்த போட்டியின் உள்நோக்கமே திறமை வாய்த்த பல வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான். சொல்லப்போனால் ஐபிஎல் மூலம் பல வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பெறுவது குறிப்பிடதக்கது. மேலும் இந்த போட்டியில் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை காட்டுவதற்காக ஐபிஎல் தொடருக்கு வருகின்றனர்.
பொதுவாகவே ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர் பட்டாளம் இருந்தாலும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் இவர்கள் இருவரும் போட்டியிடும் போது சோசியல் மீடியாக்களில் ஓவருவரை ஒருவர் விமர்சித்து வைரலாகும் அளவிற்கு இந்த போட்டிகள் மிகவும் பிரபலமாக இருக்கும். கால்பந்து போட்டியில் சொல்லப்படும் எல் கிளாசிகோ என்ற வார்த்தை சென்னை மற்றும் மும்பை அணி போட்டியிடும் போது கூறுவார்கள்.

ஏனெற்றால் சர்வதேச போட்டிகளுக்கு இணையான விறுவிறுப்பு சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் இருக்கும். சென்னை அணியை பொறுத்தவரையில் உங்களுக்கு சிஎஸ்கே ஏன் பிடிக்கும் என்று கேட்டால் தோனி இருக்கிறார் என்ற ஒரே காரணத்தை பலரும் கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் அடையாளமான சிஎஸ்கே அணியின் தமிழ் நாட்டு வீரர்கள் யாரும் இல்லை என்ற கருத்து பல காலமாகவே எழுத்து வருகிறது.

இந்நிலையில் தான் தமிழ்நாடு சட்டபேரவையில் விளையாட்டு துறை மீதான மானிய கோரிக்கையின் போது பா.மா.கா கட்சியை சேர்ந்த தர்மபுரி சட்டமற்றஉறுப்பினர் வெங்கடேஸ்வரன் தமிழ்நாட்டின் வீரர்களே இல்லாத ஒரு அணியை தடை செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார். மேலும் இதனை மக்கள் விரும்புவதகவும் தெரிவித்தார் பட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் வெஃகடேஸ்வரன்.

தமிழ் நாட்டை பொறுத்தவரையில் அதிக இளைஞர்களை கவர்ந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அப்படியொரு நிலையில் தமிழ் நாட்டின் அணியாக கருதப்படும் ஒரு அணியில் தமிழ்நாட்டில் பல திறமையான வீரர்கள் பலர் இருந்தும் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை என்றும். ஆனால் தமிழ் அணி போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விளம்பரம் படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்,





