
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 42வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து இருந்தனர். அதன் பின் வந்த வீரர்களும் அந்த வேகத்தை அப்படியே கொண்டு சென்றனர். அதே போல் தான் பஞ்சாப் அணியின் வீரர்களும் பேட்டிங் செய்யும் போது அதிரடியை காட்டி இருந்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை குவித்து இருந்தது.

அதன் பின் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்டி விளையாடி இருந்தார்கள். அதன் மூலம் இமாலய இலக்காக 262 ரன்களை அடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்தது.பஞ்சாப் அணி இந்த இலக்கை எட்டாது என்று நினைத்து கொண்டு இருந்த பலரும் இந்த போட்டியை பார்த்து உறைந்து போய் இருப்பார்கள். இதில் அதிக பட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 108 ரன்களும் ஷஷாங்க் சிங் 68 ரன்களும் பிரப்சிம்ரன் 54 ரன்களிலும் ரூசோ 26 ரன்களையும் எடுத்து இருந்தனர்.

இந்த ஒரு போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டது. T20 வரலாற்றில் 262 ரன்களை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையும் ஒரே போட்டியில் இரு அணிகளும் சேர்த்து அடிக்கப்பட்ட சிக்சர்களில் இந்த இரு அணிகள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது அதில் 42 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய இமாலாய இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரையும் அதிர வைத்து இருந்தது
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய பிரப்சிம்ரன் கூறுகையில் : இவ்வளவு ரன்களை விட்டுக் கொடுத்தாலும் அதை எளிதாக துரத்தலாம் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருந்தது. பயிற்சியாளர் பெய்லிஸ் இந்த பெரிய ஸ்கொரை துரத்துவதற்கான அழுத்தம் உங்களிடம் இருக்க வேண்டாம் சாதாரணமாக விளையாடுங்கள் என்று எங்களிடம் கூறினார். நாங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதைச் செய்ததால் வெற்றியைப் பெற முடிந்தது.
ஜானி பேர்ஸ்டோ உலகின் மிகப்பெரிய வீரர்களில் ஒருவர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டையும் விளையாடுகிறார் மற்றும் பல ஆண்டுகளாக தனது நாட்டிற்காக பல வடிவங்கள விளையாடி வருகிறார். அவருக்கு என்ன திறமை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட்டில் ஒரே ஒரு போட்டியின் மூலம் ஃபார்மில் இருந்து வெளியேற முடியும். அவர் இன்று சதம் அடித்தார். மேழும் இன்று அவர் ஒரு முக்கியமான நாக் விளையாடினார் என்றார் பிரப்சிம்ரன்.





