உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை மற்றும் மும்பை அணி நேருக்கு நேர் மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை 3 வெற்றிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் மும்பை அணி 2 வெற்றிகளை பெற்று புள்ளிபட்டியலில் 7வது இடத்திலும் இருக்கிறது. இதனால் இந்த இரண்டு அணிகளுமே வெற்றி என்பது மிகவும் தேவையான ஓன்று.

சென்னை அணியை பொறுத்தவரையில் சிஎஸ்கே எப்போதும் போல தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும், அல்லது சமயம் கிடைக்கும் போது சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் மும்பை அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொள்கின்றனர். இதனால் மைதானத்தின் தன்மை குறித்தும், ஈரப்பதம் குறித்தும் மும்பை அணிக்கு தெளிவாக தெரியும்.
இதனால் மும்பை அணிக்கு சாதகமான சூழ்நிலை இங்கு நிலவுகிறது. மேலும் அவர்களிடம் இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளர் என கருதப்படும் பும்ரா இருக்கிறார். இவர் டாட் பந்துகளை போடுவதிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் வல்லவர். இந்நிலையில் தான் இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பும்ராவுடன் சமீபத்தில் பேசியது குறித்து பேசினார்.

அவர் கூறுகையில் : மும்பை இந்தியனஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பும்ராவுடன் பும்ராவிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இங்கே இரத்தக்களரியாக மைதானம் இருக்கும் என்று கூறினார். மும்பை அணி பயிற்சி ஆட்டங்களில் 250 அல்லது அதற்கு மேற்பட்டவர்களைத் துரத்துகிறது. 250 துரத்தல் சாதாரணமானது. வெளிப்படையாக அவர்கள் கடந்த ஆண்டு 268 துரத்தினார்கள். டெல்லிக்கு எதிராக அவர்கள் 230 ரன்களை எடுத்தனர். இது 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வான்கடேவில் பந்து மிகவும் கடினமாக ஸ்விங் ஆகும். மேலும் பவர்பிளேயில் முதல் மூன்று ஓவர்களை வீசுவது மிகவும் எளிதானது. ஏனென்றால் பந்து ஸ்விங் ஆகிவிடும். அதுமட்டுமல்லாம் அப்போதுதான் பேட்ஸ்மேனும் செட்டில் ஆகிக்கொண்டிருப்பார். உங்களுடைய அணி 3 ஓவர்களில் 20/0 என இருந்தால் உங்களிடம் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கும். பவர்பிளேயின் இரண்டாவது பாதி இரத்தக்களரியாக இருக்கும்.
கொஞ்சம் விளையாடிய பிறகு ஸ்விங் ஓரளவுக்கு நின்றுவிடும். இதற்குப் பிறகு பும்ராவை தற்காப்பு ஆயுதமாக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்துகிறது என்றார் ரவிச்சந்திரன் அஷ்வின். மேலும் பும்ரா குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ராவும் பும்ரா கண்டிப்பாக சென்னை அணிக்கு முட்டுக்கட்டையாக நிற்பார் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.




