ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் அமீரகம் கத்துக்குட்டி அணியாக கருதப்படுவதால் கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் டிம் சௌதீ தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கிய நியூசிலாந்து எதிர்பார்க்கப்பட்டது போலவே முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த நிலைமையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.20 ஓவர்களில் நியூசிலாந்து 142/8 ரன்கள் மட்டுமே எடுக்கும் அளவுக்கு பந்து வீச்சில் தரமாக செயல்பட்ட அமீரகம் சார்பில் அதிகபட்சமாக அப்சல் கான் 3 விக்கெட்டுகளையும் ஜாவத் உள்ளா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 143என்ற இலக்கை துரத்திய அமீரகத்திற்கு கேப்டன் டிம் சௌதீ வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஆர்யன்ஸ் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட 15.4 ஓவர்களிலேயே 144/3 ரன்கள் எடுத்த ஐக்கிய அரபு நாடுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 போட்டியில் சிறிய அணி பெரிய அணி என்ற வேறுபாடு கிடையாது என்றும். தற்போது எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் வீழ்த்தலாம் என்று நிரூபித்துள்ளது.

இந்நிலையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க டி20 தொடர் குறித்து பேசிய அஸ்வின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் ” ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நியூசிலாந்தை தோற்கடித்தது ஒரு பெரிய சாதனையாகும், மேலும் இது பிரான்சைஸி கிரிக்கெட் என்ன செய்து வெற்றி பெற்றது என்பதையும் காட்டி இருக்கிறது. முக்கிய டெஸ்ட் நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது, அது விளையாட்டுக்கு நல்ல செய்தி.
UAE beating New Zealand is a big achievement and it’s also showing us what franchisee cricket has succeeded in doing.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 20, 2023
There is hope for the next generation cricketer coming from countries that aren’t mainstream test nations and that’s good news for the game.
When @rashidkhan_19…
ரஷீத் கான் முதல் முதலில் ஐபிஎல்லில் நுழைந்தபோது, ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பைகளில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயப்படக்கூடிய நாடாக இருக்கவில்லை, ஆனால் இப்போது அந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. எதிர்காலத்தில் மற்ற நாடுகள் ஐபிஎல்லில் பிரதிநிதித்துவம் பெறுவதையும், அந்தந்த நாடுகளில் விளையாட்டின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதையும் பார்க்கக்கூடும் என்றார் அஸ்வின்.





