உலக கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒரு அணியாக திகழ்வது இந்தியா. ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியால் ஒரு ஐசிசி கோப்பைகளை கூட வெல்ல முடியவில்லை, பல முறை இறுதி போட்டி மற்றும் எலிமினேடர் வரையில் சென்றாலும் அப்போது சிறப்பாக விளையாட வேண்டிய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பிடத்தக்க வகையில் கடந்த 2019 ஆம் ஆட்டின் உலக கோப்பை போட்டியிலும் கூட இப்படித்தான் நடந்தது.

அதில் ரோஹித் ஷர்மா , கேஎல் ராகுல், விராட் என மூவரும் 1 ரன் மட்டுமே எடுத்தனர். அதற்கு பிறகு வந்த தோனி மற்றும் ஜடேஜா ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தாலும் அவர்களினால் வெல்ல முடியவில்லை. இது போன்று சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் நடந்தது. இந்த போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரக்கல் பெரிதாக விளையாடாமல் இருக்க ரஹானே மற்றும் ஜடேயா விளையாடியும் வெற்றி பெற முடியவில்லை.
மேலும் இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் தன்னுடைய யாரும் இப்போதெல்லாம் அறிவுரை கேட்க வருவதே இல்லை என்று வருந்தி பேசியிருந்தார். இபப்டிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் இந்த விஷயம் குறித்து பேசியிருந்தார். மேலும் கபில் தேவும் இப்போதுள்ள வீரர்கள் தங்களுக்கு அனைத்தும் தெரிந்த்து போன்று இருக்கின்றனர் என விமர்சித்திருந்தார். இவரை போன்றே பலரும் விமர்சித்திருந்தனர்.

அஸ்வின் கூறியது :
இந்நிலையில் தான் அஸ்வின் இந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளார். வெளியில் இருந்து கருத்துகளை சொல்வது மிகவும் எளிதானது. சில கருத்துக்களைப் பார்க்கும்போது எனக்கு மனது வலிக்கிறது. வீரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் தெரியுமா? எனவே இந்த அளவிற்கு கடினமாக உழைக்கும் நம் கிரிக்கெட் வீரர்களுக்கு நேர்மறையை கருத்துகளை பரப்பலாம். நம்முடைய அணி போட்டியில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும், அணியை தொடர்ந்து ஆதரிப்போம் மேலும் சிறப்பாக விளையாட அவர்களை ஊக்குவிப்போம்.
One for glory hunting " ICC trophies " fans and former cricketers who spew nonsense on current players. pic.twitter.com/pc5caqmZDS
— Sunil (@Hitting_Middle) August 1, 2023
நமக்கு போட்டி நாளில் என்ன வேண்டும்? விளையாடும் வீரர்களுக்கு நிறைய நேர்மறை கருத்துகளை ரசிகர்கள் கொடுக்க வேண்டும். இதனால் நம்மை பல ஆதரிக்கின்றனர் என்று அவர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவார்கள். இந்தியா போன்ற கடின உழைப்பாளி அணியை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது. பயிற்சி அமர்வுகள், ஜிம் மற்றும் பலவற்றில் வீரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்றார் அஸ்வின்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “நாங்கள் 2011 இல் உலகக் கோப்பையையும், 2013 இல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றோம், ஆனால் நாங்கள் 10 ஆண்டுகளில் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும், “இந்தியா நீண்ட காலமாக ஐசிசி போட்டியை வென்றதில்லை என்று சொல்கின்றனர். 1983, 2007, 2011 மற்றும் 2013ல் வெற்றி பெற்றோம். கிரிக்கெட் நாடாக நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதில் பெருமைப்பட வேண்டும். உலக கோபிக்கு முன்னதாக வீரர்களுக்கு நேர்மறை கருத்துகளை கொடுப்போம் என்றார் அஸ்வின்.




