இந்தியன் பிரீமியர் லீக் தற்போது இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் முடிந்த உடனேயே இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படும். அங்கு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஸ் அணியில் இந்தியா விளையாடுவதற்காக இன்று ஏப்ரல் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வீரர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.

அதே நேரத்தில் இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஒரு வீரர் இந்த அணிக்கு மீண்டும் 15 மாதங்கள் கழித்து திரும்பியுள்ளார். அவர்தான் அஜிங்க்யா ரஹானேவைப். அஜிங்க்யா ரஹானே ஒரு காலத்தில் இந்திய அணி பேட்டிங்கின் முதுகெலும்பாக கருதப்பட்டார், ஆனால் மோசமான பார்ம் காரணமாக அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ரஹானே ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடும் போது நிறைய ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு அவர் நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல்லில் சென்னைக்காக விளையாடும்போது பல அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடினார். இதன் காரணமாக தேர்வாளர்கள் மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அவரை சேர்த்துள்ளனர், ரஹானேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்த செய்தி வெளியான உடனேயே ரசிகர்கள் பலரும ரஹானேவை பாராட்டி ட்விட்டெர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
— BCCI (@BCCI) April 25, 2023
Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL
மேலும் சிஎஸ்கே மற்றும் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரஹானே சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஹானே கூறுகையில் “எனக்கு தெளிவான மனநிலை மட்டுமே இருந்தது. உங்கள் மனம் சரியாக இருந்தால், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நான் எனது விளையாட்டை ரசிக்க முயற்சிக்கிறேன். அதன் பிறகு நான் எனது ஷாட்களை விளையாடி வேகத்தைத் தக்கவைக்க விரும்பினேன்.

நான் இதுவரை எனது அனைத்து போட்டிகளையும் ரசித்துள்ளேன். இன்னம் என்னுடைய சிறந்த ஆட்டம் வரவில்லை என்று தோன்றுகிறது. இது ஒரு சிறந்த பாடம், நான் பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக தோனியின் கீழ் விளையாடி வருகிறேன், இப்போது CSK இல் கூட இது ஒரு சிறந்த பாடம் ஆகும். தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதால் பல விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ள முடிகிறது. அவரது கேப்டன் பொறுப்பில் இருந்தபோது நான் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளேன், இப்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். அவர் சொல்வதை அப்படியே பின்பற்றினாலே போதுமானது என்று தெரிவித்தார்.





