ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. அதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் போடா முடிவு செய்தது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே அடித்து தேஷ்பாண்டேவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பின் வந்த பட்லருடன் இணைத்த படிக்கலும் சென்னை அணியின் பௌலர்களை அனைத்து திசைகளிலும் பந்துக்களை பறக்க விட்டனர். இருவரும் இணைந்து 37 பந்துகளில் 57 ரன்களை குவித்தனர்.நன்றாக விளையாடி கொண்டு இருந்த படிக்கல் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் 26 பந்துகளில் 36 ரன்களை எடுத்து வெளியேறினார். அதன் பின் வந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் ரன்களை ஏதும் எடுக்காமல் ஜடேஜாவிடமே விக்கெட்டை இழந்தார்.
அதன் பின் தடுமாற்றதில் இருந்த ராஜஸ்தான் அணியை பட்டலர் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார்.அவருடன் புதிதாக இணைந்த அஷ்வின் சென்னை அணியின் பௌலிங்கை அடித்து விளாசினார். மேலும் அடிக்க முயன்ற போது ஆகாஷ் சிங்கிடம் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அணியின் நம்பிக்கையாக இருந்து வந்த பட்லர் 33 பந்துகளில் அவருடைய 50 ரன்களை பூர்த்தி செய்தார்.
Ashwin and rahane me kaleshh pic.twitter.com/1oMcReJH5K
— Aditya Verma 🇮🇳 (@Adityaverma_12) April 12, 2023
அவராலும் நிலைத்து நிற்க முடியாமல் 52 ரன்களில் அலியிடம் விக்கெட்டை இழந்தார்.ஹெட்மயர் ஒரு சில சிச்சர்களை அடித்து வந்த நிலையில், மற்றொரு பக்கம் இருந்த ஜூரேல் மற்றொரு பக்கம் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த யாரும் நிலையாக விளையாடவில்லை.ஹோல்டர் 0 வில் வெளியேறினார்.ஹெட்மயர் மட்டுமே சிறப்பாக விளையாடி 30 ரன்களை அடித்தார். கடைசியில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்நிலையில் 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி விளையாடி கொண்டு இருக்கிறது. முதல் விக்கெட் விரைவாக விழுந்ததினால் அடுத்து இறங்கிய ரஹானே பொறுமையாக சென்னை விளையாடி வருகிறார். அப்படிபட்ட நிலையில் தான் அஸ்வின் பந்து போடா வந்த ஓவரில் நான் ஸ்ட்ரைக்கர் பக்கத்தில் இருந்த ரஹானேவை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சி செய்தார். ஆனால் ரஹானே அதனை சுதாரித்து விட்டார்.
இந்நிலையில் அடுத்த ஸ்ட்ரைக்கர் பக்கத்திற்கு வந்த ரஹானே அஸ்வின் பந்து வீச வரும் போது கீரீசில் இருந்து விலகி பந்துவீச வந்த அஸ்வினை பழிக்கு பலி வாங்கினார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





