உலகக்கோப்பை 2023 ல் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.
அதற்கு முன்னோட்டமாகவே நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடரில் அவர் பினிஷராக கடைசில் களமிறங்கு இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுதுள்ளார். அவர் 5 போட்டிகளில் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் 105 ரன்களை குவித்துள்ளார். இந்திய விக்கெட்டுகளில் விளையாடி விட்டு இங்கு விளையாடுவது சற்றுக் கூடுதல் பவுன்சாக இருக்கின்றது. எனவே வேகபத்து வீச்சாளர்களுக்கு எதிராக நான் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

முதல் நாள் பயிற்சியின்போது நல்ல வானிலை இருந்தது அப்போது என்னுடன் ராகுல் டிராவிட் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு நல்ல உணர்வாக இருந்தது நான் விளையாடும் படியே தொடர்ந்து விளையாடுவோம் என் மீது அதிக நம்பிக்கை கொள்ளவும் என்றும் அவர் அறிவுரை கூறியிருந்தார். இது குறித்து அவர் என்னிடம் கூறுகையில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும் எனவே நீங்கள் விளையாடுபடியே உங்களை நம்பிக்கையாக தொடர்ச்சியாக எடுத்துச் செல்லுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கூறிய ரிங்கு சிங் நான் 2013ஆம் ஆண்டு முதல் உத்தரப்பிரதேச அணிக்காக நான் விளையாடி வருகிறேன். அதிலும் நான் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் தான் விளையாடி வருகிறேன். எனவே எனக்கு இந்திய அணியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் விளையாடுவது எளிமையாகி விட்டது. முதலில் நான்காவது விக்கெட்டுகளை இழந்து விட்டால் ஐந்தாவது விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே நானும் அந்த இடத்தில் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்று தெளிவாக இருக்கின்றேன்என்றும் அவர் கூறியிருந்தார்.




