உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவர் தன்னுடைய கிரிக்கெட் விளையாடும் திறமையால் இந்தியா ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஜாம்பவான்கள் புகழும் அளவிற்கு பல சாதனைகளை படைத்திருக்கிறார். எந்த போட்டியாக இருந்தாலு, அந்த அணியாக இருந்தாலும், எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் களமிறங்கி பந்துகளை பார்க்க விடும் விராட் கோலியின் திறமையினால் ரன் மெஷின் என்ற பெயரையும் கிங் கோலி என்ற பெயரடையும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

அப்படி பல ஆண்டு காலம் இந்தியாவிற்காக விளையாடி வரும் விராட் கோலி இன்று இரவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாட இருக்கிறார். இந்தியாவை பொருத்தவறையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் ட்ராவிட் மற்றும் தோனி மட்டுமே 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர் அந்த லிஸ்டில் தற்போது விராட் கோலியும் இனைய இருக்கிறார்.
இந்நிலையில் நிலையில் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட் கோலி பற்றி பாராட்டி பேசியுள்ளார்.
விராட் பற்றி ராகுல் டிராவிட் :
விராட் கோலி சதேகமே இன்று பல இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் வீரராக இருக்கிறார். இந்தியாவில் உள்ள பல ஆண்களுக்கு பெண்களுக்கு பிடித்த நபராக இருக்கிறார். அவருடன் புள்ளி விபரங்கள் அவரை பற்றி பேசும். அவை அனைத்தும் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவரிடம் என்ன பார்க்கிறேன் என்றால் யாரும்பார்க்காதபோது அவர் திரைக்குப் பின்னால் வைக்கும் தன்னுடைய விளையாட்டை மேன்மைப்படுத்த செய்யும் முயற்சிகள் அதற்காக அவர் செய்த வேலை, அவர் விளையாட இருக்கும் 500 ஆட்டங்களில் பிரதிபலிக்கிறது.

அவர் மிகவும் வலிமையான ஒரு நபர். கடந்த 12-13 ஆண்டுகளாக அவர் விளையாடிய 500 ஆட்டங்களில் அவருடைய உற்சாகம் மற்றும் ஆற்றல் என்பது மிகவும் அருமையானது. அது எளிதானது கிடையாது. இதற்கு பின்னர் அவரின் கடின உழைப்பு, விளையாட்டிற்காக அவர் செய்த தியாகங்கள் மற்றும் அதனை அவர் தொடர்ந்து செய்ய தயாராக இருப்பதால் அது கிடைத்தது. இது ஒரு பயிற்சியாளருக்கு மிகச் சிறந்த ஒன்று. நிறைய இளம் வீரர்களும் அதைப் பார்த்து அதிலிருந்து ஊக்கமடைவதை நீங்கள் காணலாம்.

நீங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை, நீங்களே நடத்தும் விதம், நீங்கள் உங்களை கொண்டு செல்லும் விதம். உங்கள் உடற்தகுதி போன்றவை பல வீரர்களுக்கு ஒரு உத்வேகம். அவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள் என்று நம்புகிறோம், அவர்கள் பல விராட் கோலி போல விளையாட வேண்டும் என்று ஈர்க்கப்பட்டுள்ளனர். நிறைய கடின உழைப்பு, ஒழுக்கம், தகவமைத்து கொள்வது என அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது பல ஆடுகளுக்கு தொடரும்.

விரட்ட கோலியின் வாழ்கையை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் விளையாடும்போது அவர் ஒரு இளைஞன். பின்னர் நான் அணியில் விளையடவில்லை. அவர் அணிக்காக செய்த்தையும், செய்த பல சாதனைகளையும் நான் வெளியில் இருந்து பார்த்து ரசித்தேன். தற்போது ஒரு பயிற்சியாளராக அவரை பார்ப்பதிலும், அவரை அறிந்து கொல்வதும் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அவரை பற்றி பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அவை எனக்கு பல வழிகளில் மகிழ்ச்சியை கொடுத்தது என்றார் ராகுல் டிராவிட்.





