இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது சில தினங்களுக்கு முன் தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கினார்கள் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ராலி 69 ரன்களையும் பேர்ஸ்டோ 29 ரன்களையும் ஜோ ரூட் 26 ரன்களையும் அடித்திருந்தனர். இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்.அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை அடித்து இருந்தனர்.

அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்ததளிதது. அதில் ரூட் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து கொண்டு இருந்தார். மறுபக்கம் அவருக்கு போதுமான அளவிற்கு சப்போர்ட் கிடைக்கததால் இங்கிலாந்து அணி 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு சாதனையும் படைத்து இருந்தது.
𝗦𝘁𝗿𝗮𝗶𝗴𝗵𝘁 𝗙𝗿𝗼𝗺 𝗧𝗵𝗲 𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺!
— BCCI (@BCCI) March 10, 2024
Ft. Head Coach Rahul Dravid & Captain Rohit Sharma 💬#TeamIndia | #INDvENG | @ImRo45 | @IDFCFIRSTBank pic.twitter.com/VL7RZvNyAO
இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் வீரர்களிடம் வெற்றி குறித்து பாராட்டி பேசியிருந்தார். அவர் கூறுகையில் முதலில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இது போன்ற தொடர்களை சம்பாதிக்க வேண்டும். இது கடினமானது. டெஸ்ட் கிரிக்கெட் சில சமயங்களில் திறமை, உடல் மற்றும் மனரீதியாக கடினமாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது ஆனால் முடிவில் மிகுந்த திருப்தி உள்ளது. அத்தகைய தொடரின் முடிவில், நான்கில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் பின்னால் இருந்து வருகிறீர்கள் என்ற திருப்தி அளப்பரியது. என்றும் அவர் கூறி இருந்தார்.





